இளம்பெண் உயிரிழப்பு: தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

Added : செப் 07, 2022 | |
Advertisement
கரூர்: கரூரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இளம்பெண் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். கரூர் மாவட்டம், மணவாசி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி வளர்மதி, 27; இத்தம்பதிக்கு, மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், வளர்மதிக்கு வயிற்றில் இருந்த நீர்கட்டியை அகற்ற கடந்த, 31ம் தேதி கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்


கரூர்: கரூரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இளம்பெண் உயிரிழந்ததால், அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
கரூர் மாவட்டம், மணவாசி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் மனைவி வளர்மதி, 27; இத்தம்பதிக்கு, மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், வளர்மதிக்கு வயிற்றில் இருந்த நீர்கட்டியை அகற்ற கடந்த, 31ம் தேதி கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிறகு கடந்த, 1ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் வளர்மதிக்கு உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே வளர்மதி உயிரிழந்தார். இதனால், வளர்மதியின் உடலை மீண்டும் கரூருக்கு கொண்டு வந்து, தனியார் மருத்துவமனை முன், ஆர்ப்பாட்டம் நடத்த வளர்மதியின்
உறவினர்கள் திட்டமிட்டனர். தகவல் அறிந்த, போலீசார் வளர்மதி உடல் வந்த ஆம்புலன்ஸ் வேனை, கரூர்-கோவை சாலையில் ரெட்டிப்பாளையத்தில் நிறுத்தி வைத்தனர்.
இதனால், ஆத்திரத்தில் இருந்த வளர்மதியின் உறவினர்கள், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையை நேற்று மாலை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம், மருத்துவமனை சார்பில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிறகு, இது குறித்து புகார் கொடுத்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என வளர்மதியின் உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அதைத் தொடர்ந்து, ரெட்டிப் பாளையத்தில் வளர்மதி உடலுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வேன், அவரின் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X