செய்திகள் சில வரிகளில் நாமக்கல்

Added : செப் 07, 2022 | |
Advertisement
தண்ணீர்தொட்டி திறப்புமல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் டவுன்பஞ்சாயத்திற்குட்பட்ட, காளிப்பட்டி 2வதுவார்டு, புதுப்பாவடிதெருவில் எண்ணற்ற குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதிய தண்ணீர் தொட்டி இல்லாததால், வரும் தண்ணீரை தேக்கிவைக்க முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். பஞ்சாயத்து நிர்வாகத்தில் முறையிட்டனர். டவுன்பஞ்சாயத்து

தண்ணீர்தொட்டி திறப்பு
மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் டவுன்பஞ்சாயத்திற்குட்பட்ட, காளிப்பட்டி 2வதுவார்டு, புதுப்பாவடிதெருவில் எண்ணற்ற குடியிருப்பில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் போதிய தண்ணீர் தொட்டி இல்லாததால், வரும் தண்ணீரை தேக்கிவைக்க முடியாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
பஞ்சாயத்து நிர்வாகத்தில் முறையிட்டனர். டவுன்பஞ்சாயத்து தலைவர் திருமலை தலைமையில் மக்களின் அன்றாட பயன்பாட்டிற்காக, 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டு நேற்று திறப்புவிழா நடந்தது. கவுன்சிலர் கோகிலாசீனிவாசன், அப்பகுதியை சேர்ந்த தி.மு.க., செயலாளர் முருகேசன், டவுன்பஞ்சாயத்து அதிகாரிகள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பஞ்., துணை தலைவர்
போட்டியின்றி தேர்வு
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன் எம்.‍மேட்டுப்பட்டி பஞ், துணை தலைவராக இருந்த சரண்ராஜ்,34; கடந்த, 2 மாதங்களுக்கு முன் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பஞ், துணை தலைவர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அப்பதவிக்கு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. நேற்று துணை தலைவர் பதவிக்கான தேர்தல், பி.டி.ஓ., பிரபாகரன் முன்னிலையில் நடந்தது. சுகன்யா, 32, துணை தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

கோ கோ போட்டியில்
அரசு பள்ளி முதலிடம்
நாமகிரிப்பேட்டை: ராசிபுரம் வட்ட அளவிலான பெண்கள் கோ கோ போட்டி வடுகம் அரசு பள்ளியில் நடந்தது. இதில், ஜூனியர் பிரிவில், 7 அணிகள் பங்கேற்றன.
இந்த போட்டியில், நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும், உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும் இறுதி போட்டியில் மோதின. இதில், நாமகிரிப்பேட்டை பள்ளி முதலிடம் பிடித்தது.
அதேபோல், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவில் நாமகிரிப்பேட்டை பெண்கள் அணியும், வடுகம் அரசு பள்ளி அணியும் மோதின. இதிலும் இறுதி போட்டியில், நாமகிரிப்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று முதலிடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகள் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் ஜெகதீஸ்வரி, அருள்ஜோதி ஆகியோரை தலைமை ஆசிரியர் செண்பகவள்ளி பாராட்டினார்.
வரும் 9ல் நடராஜர் அபிஷேகம்
ப.வேலூர்: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் - திருஞானசம்பந்தர் மடாலயத்தில், நடராஜர் அபிஷேகம் வரும்,9ம் தேதி ஆவணி மாத சதுர்தசியை முன்னிட்டு காலை, 8:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை நடைபெறும். கைலாய வாத்தியம் முழக்கத்துடன் தேவாரம் திருவாசகம் ஓதலுடன் சிவகாமசுந்தரி உடனாகிய நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். மதியம், 1:00 மணி அளவில் மகேஸ்வர பூஜை உடன் அனைவருக்கும் அன்னம் பாலிப்பு நடைபெறும்.

அரசு கல்லுாரியில்
முப்பெரும் விழா
ராசிபுரம்: ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரியில் ஆசிரியர் தினவிழா, நான் முதல்வன் திட்ட செயலாக்க விழா, போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு விழா என முப்பெரும் விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் பங்காரு தலைமை வகித்து பேசுகையில், ''நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் அறிவு மற்றும் ஆற்றலை வெளி கொண்டு வரும் வகையிலும், வேலை வாய்ப்புக்கு வழிகாட்டும் வகையிலும் உள்ளது. போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை மாணவர்களிடம் கூறி விழிப்புணர்வை பேராசிரியர்கள் ஏற்படுத்த வேண்டும்,'' என்றார். கல்லூரி துறைத்தலைவர்கள் சிவக்குமார், நாகூர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரசு கல்லுாரி பேராசிரியர்களுக்கு
பெரியார் பல்கலை விருது
ராசிபுரம்: ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லூரி அரசியல் அறிவியல் துறைத் தலைவர் மேஜர் சிவக்குமார். இவருக்கு பெரியார் பல்கலைம் ஆசிரியர் தினவிழாவில், பல்கலை அளவில் 2020--21-ம் ஆண்டின் சிறந்த ஆராய்ச்சியாளர் விருது வழங்கப்பட்டது.
இக்கல்லூரியின் கணிதத் துறை தலைவர் சதாசிவம், சிறந்த ஆசிரியருக்கான விருதும், இயற்பியல் துறை இணைப்பேராசிரியர் பிரிஷெல்லா ஜெயக்குமார் சிறந்த ஆசிரியருக்கான விருதும் பெற்றனர். பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகந்நாதன் தலைமையில் நடந்த விழாவில், சேலம் வினாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலை துணைவேந்தர் சுதிர் விருது வழங்கி கவுரவித்தார்.

தடகளப்போட்டி இன்று துவக்கம்
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை வட்ட அளவிலான பெண்கள் தடகளப்போட்டி இன்று நாமகிரிப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்குகிறது. சி.இ.ஓ., மகேஸ்வரி தொடங்கி வைக்கிறார். டி.இ.ஓ., சுப்ரமணி முன்னிலை வகிக்கிறார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அன்பழகன் விளையாட்டு கொடியை ஏற்றுகிறார். மாலை பரிசளிப்பு விழா நடக்கிறது. தலைமை ஆசிரியர் செண்பகவள்ளி தலைமை வகிக்கிறார். அமைச்சர் மதிவேந்தன், தி.மு.க.,-எம்.பி., ராஜேஷ்குமார் ஆகியோர் பரிசு வழங்குகின்றனர். ஆண்களுக்கான தடகளப்போட்டி, நாளை இதேப்பள்ளியில் தொடங்குகிறது. இதில், நாமகிரிப்பேட்டை வட்டாரத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொள்கின்றன.

'நம்ம ஊரு சூப்பரு' விழிப்புணர்வு பேரணி
வெண்ணந்துார்: வெண்ணந்தூர் ஒன்றியம், பொன்பரப்பிப்பட்டி ஊராட்சியில், நம்ம ஊரு சூப்பரு திட்டத்தில், சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தல் மற்றும் பேரணி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் மாதவன், பிரபாகரன் ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர். அங்கன்வாடி, பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. துணைத்தலைவர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கடலை அறுவடை தீவிரம்
வெண்ணந்துார்: வெண்ணந்தூர் பகுதியில், மானாவாரியாக நிலக்கடலை சாகுபடி செய்கின்றனர். நடப்பு பருவத்துக்கு கடந்த மே மாத இறுதியில் நிலக்கடலை ரகங்களை மானாவாரியாக சாகுபடி செய்தனர். கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் நிலக்கடலை செடிகள் செழித்து வளர்ந்து அறுவடைக்கு தயாராகின. நிலக்கடலையை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
யாகசாலை பூஜை துவக்கம்
குமாரபாளையம், செப். 7-
குமாரபாளையத்தில் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் யாகசாலை பூஜை நடந்தது. குமாரபாளையம், பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஆக. 19ல் கால்கோள் விழாவுடன் துவங்கியது. ஆக. 29 முளைப்பாரி இடுதல், நேற்றுமுந்தினம் யானை, ஒட்டகம், குதிரையுடன் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. நேற்று யாகசாலை பூஜை, ஸ்தல விருட்சம் முன் பூஜையுடன் துவங்கியது. நாளை காலை, 9:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.

மாதந்தோறும் மின் கட்டணம்
வசூலிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பள்ளிபாளையம், செப். 7-
பள்ளிபாளையத்தில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்க வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் நடந்தது.
பள்ளிபாளையம் அருகே ஒட்டமெத்தை பகுதியில் உள்ள மின் செயற்பொறியாளர் அலுவலகம் முன், நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் அசன் தலைமை வகித்தார். மின்வாரியம் தனியார் மயமாவதை கண்டித்தும், மின் கட்டண உயர்வை தமிழக அரசு கை விட கோரியும், மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார திருத்த சட்டம் 2022 மசோதாவை திரும்ப பெற வேண்டும். மாதந்தோறும் மின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பன உட்பட
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், ஒன்றிய பொருளாளர் முருகேசன், மா.கம்யூ., கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வேளாண் அறிவியல் நிலையத்தில்
நாளை பூச்சி நோய் மேலாண் பயிற்சி
மோகனுார், செப். 7-
'நாளை வேளாண் அறிவியல் நிலையத்தில், மக்கா சோளத்தில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்' என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி நடக்கிறது' என, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் அழகுதுரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்த பயிற்சி முகாமில், குறைந்த காலத்தில் அதிக லாபம் தரும் மக்காசோள ரகங்கள் பற்றியும், இப்பயிரை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களின் அறிகுறிகள், அவற்றை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள், இயற்கை பூச்சி கொல்லிகள் தயாரித்தல், வளர்ச்சியூக்கிகள் பயன்படுத்துதல், நுண்ணுாட்ட மேலாண் பற்றியும் விளக்கப்படுகிறது. அதில், விவசாயிகள், விவசாயம் சார்ந்த களப்பணியாளர்கள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பைக் மோதியதில்
தொழிலாளி பலி
நாமக்கல், செப். 7-
நாமக்கல் குட்டைத்தெருவை சேர்ந்தவர் லாரி பட்டறை தொழிலாளி துளசிநாயுடு, 82; நேற்று காலை, 9:30 மணிக்கு, நாமக்கல்-சேலம் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது, பஸ் ஸ்டாண்ட் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் துளசிநாயுடு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம், 12:30 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆசிரியை தற்கொலை
ப.வேலூர், செப். 7-
சேலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம், 55; இவரது மனைவி உமாதேவி, 50. இவர் அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூரில் உள்ள தன் தாய் வீட்டில், ஆறு நாட்களாக தங்கியிருந்தார்.
மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு கழிவறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்ப வரவில்லை. அவரது பெற்றோர் கழிவறை கதவை உடைத்து பார்த்தபோது அங்கு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உமாதேவி இறந்து விட்டதாக தெரிவித்தனர். ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர். பி.ஜி.பி., கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா
நாமக்கல், செப். 7-
நாமக்கல், பி.ஜி.பி., கல்வி நிறுவனங்களின் கீழ் செயல்படும், பி.ஜி.பி., கல்லுாரிகளில் படித்த மாணவ, மாணவியருக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. கல்வி நிறுவன தலைவர் பழனி ஜி பெரியசாமி தலைமை வகித்தார்.
முன்னதாக கல்வி நிறுவன தாளாளர் கணபதி வரவேற்றார். கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் சீதாலட்சுமி, 1,300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
மேலும் கடந்த ஆண்டு பல்கலை அளவில் துறை வாரியாக சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு, கார்த்திகேயன் சென்னிமலை பதக்கம்; விஸ்வநாதன்; பழனிகவுண்டர்; பழனியம்மாள் பழனிகவுண்டர்; பழனி ஜி பெரியசாமி; விசாலாட்சி பெரியசாமி ஆகிய பதக்கங்களை வழங்கி கவுரவித்தனர். இதில் அனைத்து பி.ஜி.பி., குழும கல்லுாரிகளின் முதல்வர்கள், நிர்வாக இயக்குனர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கல்லுாரி முதன்மையர் பெரியசாமி நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X