நாமக்கல்லில் நாளை கல்லூரி மாணவ, மாணவியருக்கான ஓவியப்போட்டி

Added : செப் 07, 2022 | |
Advertisement
கல்லுாரி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி, நாளை நாமக்கல்லில் நடக்கிறது.இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், சென்னையில் செயல்பட்டு வரும், மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், நாமக்கல்லில், வரும், 9ம் தேதி முதல், 13ம் தேதி வரை, ஐந்து நாள், அமிர்த பெருவிழா நடக்கிறது.அதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி, நாளை மதியம், 2:00



கல்லுாரி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி, நாளை நாமக்கல்லில் நடக்கிறது.
இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ், சென்னையில் செயல்பட்டு வரும், மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில், நாமக்கல்லில், வரும், 9ம் தேதி முதல், 13ம் தேதி வரை, ஐந்து நாள், அமிர்த பெருவிழா நடக்கிறது.
அதையொட்டி, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவியருக்கான ஓவியப் போட்டி, நாளை மதியம், 2:00 மணிக்கு, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடக்கிறது.
இப்போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள், 'சுதந்திரமும் பெண்கள் முன்னேற்றமும்' என்ற தலைப்பில், வாட்டர் கலர் பயன்படுத்தி ஓவியம் வரைய வேண்டும். பங்கேற்பாளர்களுக்கு, வரைதாள் வழங்கப்படும். ஒரு கல்லுாரியில் இருந்து, இரண்டு மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். போட்டிக்கு வரும் மாணவர்கள், கல்லுாரி முதல்வர் அல்லது துறைத் தலைவரிடம் இருந்து சான்றிதழ், கடிதம் பெற்று வரவேண்டும்.
முதல் பரிசு, 2,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 1,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 500 ரூபாய் மற்றும் இரண்டு ஆறுதல் பரிசு, தலா, 250 ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
வரும், 9ம் தேதி நடக்கும் துவக்க விழாவில், மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X