ப.வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரும் 30 வரை கொப்பரை தேங்காய் கொள்முதல்

Added : செப் 07, 2022 | |
Advertisement
'ப.வேலுார் ஒழுங்குமுறை விற்பனைக்கூடக்கூடத்தில், வரும், 30 வரை, கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது' என, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும், தமிழக அரசு, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.தென்னை சாகுபடி செய்த விவசாயிகள்


'ப.வேலுார் ஒழுங்குமுறை விற்பனைக்கூடக்கூடத்தில், வரும், 30 வரை, கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படுகிறது' என, கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும், தமிழக அரசு, அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய் விளைபொருளை, மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
நாமக்கல் மாவட்டத்துக்கு கொள்முதல் இலக்காக, 1,000 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கொப்பரை கொள்முதல் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது, தேங்காய்ப்பருப்பு விலை, கிலோ, 75 ரூபாய் முதல், 80 ரூபாய் வரை உள்ளுர் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழக அரசு, விவசாயிகளின் நலன் கருதி நிர்ணயிக்கப்பட்ட தரத்துக்கு, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையில், அரவைக் கொப்பரை தேங்காய் விலை கிலோ, 105.90 ரூபாய்க்கும், பந்து கொப்பரை தேங்காய் கிலோ, 110 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், இத்திட்டம் ப.வேலுார் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக்கணக்கு ஆகிய விபரங்களுடன், ப.வேலுார் ஒழுங்குமுறை விற்பனைக்கூடக் கண்காணிப்பாளரை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
தேங்காய் கொப்பரை கொள்முதல், வரும், 30 வரை, நடக்கிறது. தேங்காய் கொப்பரை விளை
பொருளுக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X