நாமக்கல்லில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 103 மொபைல் போன் ஒப்படைப்பு

Added : செப் 07, 2022 | |
Advertisement
நாமக்கல் மாவட்டத்தில், திருட்டுப்போன, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 103 மொபைல் போன்கள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 103 மொபைல்போன்கள் திருட்டு போனது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள், போலீசில் புகார் செய்தனர். ஒருவர் ஆன்லைன் மூலம், ஒரு லட்சம் ரூபாய் பணம் செலுத்தி மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார்


நாமக்கல் மாவட்டத்தில், திருட்டுப்போன, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 103 மொபைல் போன்கள், உரியவர்களிடம் ஒப்படைக்கப்
பட்டது.
நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், 103 மொபைல்போன்கள் திருட்டு போனது. இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள், போலீசில் புகார் செய்தனர். ஒருவர் ஆன்லைன் மூலம், ஒரு லட்சம் ரூபாய் பணம் செலுத்தி மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, சைபர் கிரைம் போலீசாருக்கு, நாமக்கல் எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார்.
சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 103 மொபைல் போன்கள் மற்றும் ஆன்லைன் மோசடியில் இழந்த, ஒரு லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது.
நாமக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மீட்கப்பட்ட மொபைல் போன்கள் மற்றும் பணத்தை, எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி, உரியவர்களிடம் ஒப்படைத்தார். விரைவாக மொபைல் போன் மற்றும் பணத்தை மீட்ட, சைபர் கிரைம் பிரிவு போலீசாரை அவர் பாராட்டினார்.
இது குறித்து எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி நிருபர்களிடம்
கூறியதாவது:
தற்போது, மொபைல்போன் அனைவருக்கும் அத்தியாவசிய ஒன்றாகிவிட்டது. மொபைல் போனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பொது இடங்களிலோ, சாலையில் மற்றும் பஸ்சில், கேட்பாரற்று மொபைல் போன் கிடந்தால், அவற்றை அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைக்க வேண்டும்.
அதன் உரிமையாளர் யார் என்பதை கண்டறிந்து, உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். ஆன்லைன் மோசடி அதிகரித்து வருகிறது. அதனால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X