'நவீன தொழில்நுட்ப மையம் அமைக்க 71 ஐ.டி.ஐ.,க்கு தலா ரூ.31 கோடி ஒதுக்கீடு'

Added : செப் 07, 2022 | |
Advertisement
சேலம்: சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் நேற்று ஆய்வு செய்தார். புது தொழில்நுட்ப மையம் அமைக்க, தேர்வான இடத்தை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.பின், அவர் கூறியதாவது:ஐ.டி.ஐ.,யில் படிக்கும் இளைஞர்களுக்கு, 100 சதவீத வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்தாண்டுக்கு முன்,


சேலம்: சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் நேற்று ஆய்வு செய்தார். புது தொழில்நுட்ப மையம் அமைக்க, தேர்வான இடத்தை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
பின், அவர் கூறியதாவது:
ஐ.டி.ஐ.,யில் படிக்கும் இளைஞர்களுக்கு, 100 சதவீத வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆய்வு நடத்தப்பட்டது. கடந்தாண்டுக்கு முன், சேலத்தில் படித்த இளைஞர்களில், 41 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. அது கடந்தாண்டு, 63 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சராசரியாக, 60 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அனைவருக்கும் அரசு வேலை கிடைக்காது என்பதால், தனியார் நிறுவனம் மூலம், 66 இடங்களில் முகாம் நடத்தி, 99 ஆயிரத்து, 900 இளைஞர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. விரைவில் லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் சூழல் உருவாகும்.
தமிழகத்தில், 71 ஐ.டி.ஐ.,க்களுக்கு தலா, 31.98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் மேலை நாட்டுக்கு இணையான தொழில்நுட்ப வசதி, ரோபோட்டிக், ஆட்டோமேசன் போன்ற நவீன தொழில்நுட்பத்தில் அவர்கள் விரும்பும் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன்மூலம் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கி, வேலை இல்லை என்ற போக்கு மாற்றப்படும். தமிழகத்துக்கு, 6,000 கோடி ரூபாய் முதலீடு வரப்பெற்றுள்ளதால், இளைஞர்களுக்கு புது வேலை வாய்ப்பு உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X