தொழில் தொடங்க உகந்த நாடு இந்தியா கருத்தரங்கில் கியூபா துணை தூதர் பேச்சு

Added : செப் 07, 2022 | |
Advertisement
''இந்தியா மனித வளம், இயற்கை வளத்தில் சிறந்திருப்பதால், தொழில் தொடங்க உகந்த நாடாக உள்ளது,'' என, கியூபா துணை துாதர் எபில் டெஸ்பைனே பேசினார்.சேலம் பெரியார் பல்கலையில் மேலாண்மை துறை சார்பில், 'தொழில்முனைவோர் கண்டுபிடிப்பு மற்றும் தொடக்கம்' தலைப்பில், இரு நாள் சர்வதேச கருத்தரங்கு நேற்று தொடங்கியது. துணைவேந்தர் ஜெகநதான் தலைமை வகித்தார். அதில், இந்தியா, பங்களாதேஷ்,


''இந்தியா மனித வளம், இயற்கை வளத்தில் சிறந்திருப்பதால், தொழில் தொடங்க உகந்த நாடாக உள்ளது,'' என, கியூபா துணை துாதர் எபில் டெஸ்பைனே பேசினார்.
சேலம் பெரியார் பல்கலையில் மேலாண்மை துறை சார்பில், 'தொழில்முனைவோர் கண்டுபிடிப்பு மற்றும் தொடக்கம்' தலைப்பில், இரு நாள் சர்வதேச கருத்தரங்கு நேற்று தொடங்கியது. துணைவேந்தர் ஜெகநதான் தலைமை வகித்தார். அதில், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூடான் நாடுகளுக்கு, கியூபாவின் துணை துாதரான எபில் டெஸ்பைனே பேசியதாவது:
இந்தியா ஒற்றுமை, மனித நேயமிக்க நாடாக உள்ளது. இரு நாடுகள் இடையே நட்புறவு, இந்தியாவின் முதல் பிரதமர் நேரு காலத்தில் இருந்தே தொடர்கிறது. 'யோகா' மூலம் உலகளவில் ஒரு பெரிய இணைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது. கியூபா, இந்தியாவுடன் தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி, ஆராய்ச்சி தொடர்பாக மாணவ, மாணவியர், பேராசிரியர்களை பரிமாறிக்கொள்ளவும் தயாராக உள்ளது.
குறிப்பாக, புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறைக்கு கியூபா அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. இந்தியா மனித வளம், இயற்கை வளத்தில் சிறந்திருப்பதால், தொழில் தொடங்க உகந்த நாடாக உள்ளது. பிரபல நிறுவனங்கள், கியூபாவில் ஓட்டல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இந்த கருத்தரங்கு, இந்தியாவுடன் பொருளாதார நட்புறவிற்கு வலுசேர்க்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கிழக்கு ஆப்ரிக்கா ஆம்போ பல்கலை இணை பேராசிரியர் தமிழரசு, பெரியார் பல்கலை மேலாண்மை துறைத்தலைவர் பழனிவேலு, பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X