கெலவரப்பள்ளி அணைக்கு வரலாறு காணாத நீர்வரத்து : 7,140 கன அடி திறப்பால் மூழ்கிய தரைப்பாலம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு வரலாறு காணாத வகையில் நேற்று வினாடிக்கு, 7,140 கன அடி நீர்வரத்தால், அதேயளவு நீர் திறப்பால், அணை எதிரேயுள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 2,020 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா நீர்பிடிப்பு பகுதியில் கனமழையால் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி


ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு வரலாறு காணாத வகையில் நேற்று வினாடிக்கு, 7,140 கன அடி நீர்வரத்தால், அதேயளவு நீர் திறப்பால், அணை எதிரேயுள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 2,020 கன அடி நீர்வரத்து இருந்தது. கர்நாடகா நீர்பிடிப்பு பகுதியில் கனமழையால் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி முதல், நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு, 5,932 கன அடியாக இருந்த நீர்வரத்து, காலை, 11:00 மணிக்கு, 7,140 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.98 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், அணை பாதுகாப்பு கருதி தென்பெண்ணையாற்றில், 7,140 கன அடி நீரும் திறப்பால், ஆற்றில் ரசாயன நுரை தேங்கியது.
அணை எதிரே உள்ள தட்டகானப்பள்ளி தரைப்பாலம் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், வாகனங்கள், 10 கி.மீ., வரை சுற்றிக்கொண்டு செல்ல வேண்டி இருந்தது. அவ்வழியாக இயக்கப்படும், 10, 21, 23ம் நம்பர் அரசு டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அணையிலிருந்து, 7,140 கன அடி நீர் திறப்பால், சுற்றுலா பயணிகளுக்கு நேற்று அனுமதி வழங்கப்படவில்லை. அணைக்கு சற்று முன்பாக, சாலையின் குறுக்கே கயிற்றை கட்டி, சுற்றுலா பயணிகள் வருவதை நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, கடந்த, 1995ல், கெலவரப்பள்ளி அணை கட்டப்பட்டது. அதன் பின், 2005 அக்., 25ல் அதிகபட்சமாக, 5,900 கன அடி நீர்வரத்து இருந்தது. அதன் பின், 17 ஆண்டுகளுக்கு பின் நேற்று, அணை வரலாற்றில் முதல்முறையாக, 7,140 கன அடி நீர்வரத்து இருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X