பிரமாண்டம்... மிரட்டல்... கச்சித கதாபாத்திரம்: எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛பொன்னியின் செல்வன்' டிரைலர்

Updated : செப் 07, 2022 | Added : செப் 07, 2022 | கருத்துகள் (32) | |
Advertisement
சாகாவரம் பெற்ற கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயற்சித்தும் நடக்கவில்லை. தற்போது மணிரத்னம் அதை படமாக எடுத்து சாதித்து விட்டார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்., 30ல் வெளியாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்ய லட்சுமி,
Ponniyilselvantrailer, PS1Trailer, Ponniyinselvan, Maniratnam, Vikram, Karthi, Jayamravi, Trisha, Aishwaryarai,

சாகாவரம் பெற்ற கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எம்ஜிஆர், கமல் உள்ளிட்டோர் முயற்சித்தும் நடக்கவில்லை. தற்போது மணிரத்னம் அதை படமாக எடுத்து சாதித்து விட்டார். இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்., 30ல் வெளியாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயசித்ரா, பிரகாஷ்ராஜ், சோபிதா துலிபாலா உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்போது படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. 3.23 நிமிடம் ஓடக் கூடிய டிரைலருக்கு கமல்ஹாசன் முன்னுரை வழங்கி குரல் கொடுத்துள்ளார்.

‛‛ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ நாடு தன் பொற்காலத்தை அடைவதற்கு முன் வானில் ஒரு பெரும் வால் விண்மீன் தோன்றியது...'' என்று தொடங்கும் கமலின் குரல் கணீர் என்று ஒலிக்கிறது. ‛‛பேஸ் வாய்ஸ்''-சில் ஒலிக்கும் கமல் குரல், டிரைலருக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. வேறு யார் குரல் கொடுத்திருந்தாலும் இவ்வளவு எடுபட்டு இருக்குமா என்பது சந்தேகம் தான்.


latest tamil news
ஆட்சி அதிகாரத்தை பிடிக்க நடக்கும் போட்டி, பகை, வஞ்சம், சூழச்சி என கதையோட்டம் இருக்கும்படியாக டிரைலர் அமைந்துள்ளது. டிரைலரில் காட்டப்பட்டுள்ள பிரமாண்ட அரண்மனைகள், போர்க்கள காட்சிகள், கடற்படை சண்டைக் காட்சிகள், கச்சிதமான கதாபாத்திரம், பிரமாண்ட உணர்வை நமக்குள் கடத்தும் பின்னணி இசை என பக்காவாக டிரைலரில் பொருந்தி உள்ளது. பாகுபலி படத்திற்கு குறையாத பிரமாண்டம் இந்த படத்தில் இருக்கும் என டிரைலரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.

டிரைலரில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம் உள்ளிட்ட படத்தில் உள்ள பெரும்பாலான நட்சத்திரங்கள் தோன்றும்படி உருவாக்கி உள்ளனர். டிரைலர் வெளியாகி 14மணிநேரத்தில் இதுவரை 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 3.70 லட்சம் பேர் லைக்ஸ் செய்துள்ளனர்.

டிரைலரை காண: https://youtu.be/D4qAQYlgZQs


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rsudarsan lic - mumbai,இந்தியா
07-செப்-202220:09:35 IST Report Abuse
rsudarsan lic தமிழ் எழுத வராத தமிழர்கள், சிங்கப்பூரிலிருந்து தனிநபர் விமர்சனங்கள் இவைதான் பிரசுரமாகி உள்ளன. இருபெரும் வித்தகர்களால் செய்ய முடியவில்லை என்பது உண்மை. அதிலும் கமலின் வாய்ச்சவடால் மிக அதிகம். இப்போது ட்ரெண்ட் படி இரு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. பாகுபாட்டை வசூலில் மிஞ்சும் என்பதே கேள்வி. உலகளாவிய திருட்டு வீடியோ ரசிகர்களின் தமிழ்ப்பற்று தான் இதன் வெற்றி உள்ளது
Rate this:
Cancel
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
07-செப்-202219:36:34 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் .... இன்றைய கலியுக காலத்தைப் போல.... மதம், சாதி, இனம், மொழி இல்லாது... மக்கள் அனைவரும் அமைதியாக வாழ்ந்த காலம்தான் சேர, சோழ, பாண்டியர்கள் காலம்.... அதில்... அரசப் பரம்பரைச் சேர்ந்தவர்கள்தான்.... மண்ணாசையாலும், பொன்னாசையாலும் போர்களை நடத்தி.... பகையை உருவாக்கினரே தவிர.... அந்த சரித்திர புருஷர்களையாவது “மதம், இனம், மொழி, சாதி”...ங்கற வட்டத்துக்குள்ளார இழுக்காம.... ஒரு வரலாற்று நவீனத்தை எப்படி பார்க்கணுமோ அப்படி பாருங்க...? ..
Rate this:
07-செப்-202220:35:33 IST Report Abuse
Nagendran,Erode ஆமாமா சரக்கு மிடுக்கோடதான் பாக்கணும் போவியா?...
Rate this:
Cancel
வந்தியதேவ வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
07-செப்-202219:35:29 IST Report Abuse
வந்தியதேவ வல்லவரையன் .... இன்றைய கலியுக காலத்தைப் போல.... மதவெறியும், சாதிவெறியும், இனவெறியும், மொழிவெறியும் இல்லாது... மக்கள் அனைவரும் அமைதியாக வாழ்ந்த காலம்தான் சேர, சோழ, பாண்டியர்கள் காலம்.... அதில்... அரசப் பரம்பரைச் சேர்ந்தவர்கள்தான்.... மண்ணாசையாலும், பொன்னாசையாலும் போர்களை நடத்தி.... பகையை உருவாக்கினரே தவிர.... அந்த சரித்திர புருஷர்களையாவது “மதம், இனம், மொழி, சாதி”...ங்கற வட்டத்துக்குள்ளார இழுக்காம.... ஒரு வரலாற்று நவீனத்தை எப்படி பார்க்கணுமோ அப்படி பாருங்க...? அதைவிட்டுவிட்டு... “யானை பட்ட போட்டிருக்கா... நாமம் போட்டிருக்கா..”ன்னு விவேக் காமெடி மாதிரி கேள்வி கேக்காதீங்க....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X