கூடுதல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் இன்னோவா ஹைகிராஸ்!| Dinamalar

கூடுதல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் இன்னோவா ஹைகிராஸ்!

Updated : செப் 07, 2022 | Added : செப் 07, 2022 | கருத்துகள் (1) | |
டொயோட்டா நிறுவனம் நான்காம் தலைமுறை இன்னோவா காரை விரைவில் இந்தியா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.கடந்த 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இன்னோவா கார் நல்ல விசாலமான இடவசதி, செளகரியமான பயணம் என வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும்பாலும் அரசியல் கட்சியினரும், பெரிய குடும்பத்தினரும் பயன்படுத்தும் காராக வலம் வந்தது டொயோட்டா இன்னோவா. அதன்பின்
Dinamalar, Automobiles, Toyota Innova Highcross, தினமலர், ஆட்டோமொபைல், டொயொட்டா இன்னோவா ஹைகிராஸ்

டொயோட்டா நிறுவனம் நான்காம் தலைமுறை இன்னோவா காரை விரைவில் இந்தியா சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இன்னோவா கார் நல்ல விசாலமான இடவசதி, செளகரியமான பயணம் என வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பெரும்பாலும் அரசியல் கட்சியினரும், பெரிய குடும்பத்தினரும் பயன்படுத்தும் காராக வலம் வந்தது டொயோட்டா இன்னோவா. அதன்பின் இதில் அப்டேட் வெர்ஷன்களாக மூன்று தலைமுறை இன்னோவா மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் டொயோட்டா நிறுவனம் தற்போது ஹைப்ரிட் , தானாக பிரேக் பிடித்தல் மற்றும் சன்ரூஃப் போன்ற எக்கசக்க சிறப்பு வசதிகளுடன் நான்காம் தலைமுறை இன்னோவா மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. 'இன்னோவா ஹைகிராஸ்' எனும் பெயரில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.latest tamil newsசிறப்பு தொழில்நுட்ப வசதியாக டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் காரில் ஹைபிரிட் அம்சத்தை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, பெட்ரோல் மற்றும் மின் மோட்டார் ஆகிய இரண்டிலும் இயங்கும் வசதிக் கொண்ட காராக இன்னோவா ஹைகிராஸ் இந்தியாவில் அறிமுகம் ஆகவுள்ளதாக தெரிகிறது. இந்த இரு மோட்டார்களும் இணைந்து இன்னோவா ஹைகிராஸ் காரை அதிக மைலேஜ் தரும் காராக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.latest tamil newsதற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவா க்ரிஸ்டா ரியர் வீல் செட்-அப் உடன் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இன்னோவா ஹைகிராஸ் முன் பக்க வீல் இயக்கம் செட்-அப் உடன் விற்பனைக்கு வர உள்ளது. அதுமட்டுமல்லாமல், புதிய இன்னோவா ஹைகிராஸ் 4.7 மீட்டர் நீளம், 2,850 மிமீ வீல் பேஸ் மற்றும் தற்போதைய இன்னோவா க்ரிஸ்டாவைக் காட்டிலும் 100 மீட்டர் கூடுதல் நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவாவைக் காட்டிலும் அதிக இட வசதியைக் கொண்டதாக இருக்கும் என தெரிகிறது. இதுபோக புதிய இன்னோவா ஹைகிராஸில் அதிக மைலேஜ் கிடைப்பதற்காக தற்போது விற்பனையில் இருக்கும் இன்னோவா கிரிஸ்டாவை விட சற்று எடை குறைவான சேஸிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.latest tamil newsமெல்லிய இழை போன்ற ஹெட்லேம்ப், வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள், ரெக்லைனிங் கேப்டைன் இருக்கை, ஒயர்லெஸ் சார்ஜிங், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற உள்ளன. இதுதவிர, புதிய இன்னோவா ஹைகிராஸ் காரில் மிக முக்கியமான சிறப்பம்சங்களாக சன்ரூஃப் மற்றும் அடாஸ் (Advanced driver assistance systems)தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அடாஸ் அம்சத்தின் மூலமாக தானாக பிரேக் பிடித்தல், லேன் கீப் அசிஸ்ட், டிரைவர் அசிஸ்ட் போன்ற வசதிகளைப் பெற முடியும்.latest tamil newsஇந்த புதிய இன்னோவா ஹைகிராஸில் கூடுதலாக என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. அறிமுகத்திற்கு முன்னர் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X