சிறுமியரை பலாத்காரம் செய்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை | Dinamalar

சிறுமியரை பலாத்காரம் செய்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை

Added : செப் 07, 2022 | |
ஈரோடு:இரண்டு சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த, 61 வயது முதியவருக்கு, தலா, ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஈரோடு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.ஈரோடு மாவட்டம் அறச்சலுார் சில்லாங்காட்டு புதுார் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சங்கர், 61. இவர், 2021ல் அப்பகுதியை சேர்ந்த, 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், அறச்சலுார் போலீசில் புகார்

ஈரோடு:இரண்டு சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்த, 61 வயது முதியவருக்கு, தலா, ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஈரோடு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈரோடு மாவட்டம் அறச்சலுார் சில்லாங்காட்டு புதுார் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சங்கர், 61. இவர், 2021ல் அப்பகுதியை சேர்ந்த, 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், அறச்சலுார் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில், மற்றொரு, 8 வயது சிறுமியையும் அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.

'போக்சோ' சட்டப் பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிந்த போலீசார், கைது செய்து, கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.வழக்கு, ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணைக்கு பின் நேற்று முன்தினம், நீதிபதி மாலதி தீர்ப்பு வழங்கினார்.இரு சிறுமியரை திட்டமிட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த சங்கருக்கு தலா, 7 ஆண்டு சிறை தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X