பள்ளி மாணவன் கொலை சம்பவம் மருத்துவமனையில் விசாரணை| Dinamalar

பள்ளி மாணவன் கொலை சம்பவம் மருத்துவமனையில் விசாரணை

Added : செப் 07, 2022 | |
காரைக்கால்:காரைக்காலில் விஷம் கொடுத்து மாணவனை கொலை செய்த சம்பவத்தில், சுகாதார துறை துணை இயக்குனர் தலைமையிலான குழுவினர், அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பாலமணிகண்டன்,13; தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். படிப்பில் போட்டியாக இருந்ததால், கடந்த 3ம் தேதி பள்ளியில் இருந்த மாணவருக்கு
பள்ளி மாணவன் கொலை சம்பவம்  மருத்துவமனையில் விசாரணை

காரைக்கால்:காரைக்காலில் விஷம் கொடுத்து மாணவனை கொலை செய்த சம்பவத்தில், சுகாதார துறை துணை இயக்குனர் தலைமையிலான குழுவினர், அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டனர்.

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் நேரு நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பாலமணிகண்டன்,13; தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார். படிப்பில் போட்டியாக இருந்ததால், கடந்த 3ம் தேதி பள்ளியில் இருந்த மாணவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, அதே பள்ளி மாணவியின் தாயார் விக்டோரியா,45; கைது செய்யப்பட்டார். மாணவன் உடலை காரைக்கால் அரசு மருத்துவமனையில், ஜிப்மர் மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை செய்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து, உடல் அடக்கம் செய்யப்பட்டது.இந்நிலையில், அரசு மருத்துவமனை ஊழியர்கள், உரிய நேரத்தில் முறையாக பரிசோதித்து சிகிச்சை அளித்திருந்தால், இறப்பை தவிர்த்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

மாணவன் இறப்பு சம்பவம் தொடர்பாக விசாரித்திட சுகாதாரத்துறை துணை இயக்குனர் முரளி உட்பட சிறப்பு குழுவை நியமித்து, சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு உத்தரவிட்டார்.நேற்று முன்தினம், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த, சிறப்பு மருத்துவக் குழுவினர், மாணவன் பாலமணிகண்டன் அனுமதிக்கப்பட்ட வார்டை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, மாணவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர், செவிலியர், பணியாளர்களிடம் தனித் தனியே விசாரணை நடத்தினர். அப்போது, மாணவர் எந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குளிர்பானத்தில் என்ன மருந்து கலந்து கொடுத்ததாக கூறினர், முதலுதவி சிகிச்சை யார் அளித்தது. என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் ஏற்பட்ட மாற்றம் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர்.பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 3 மணி நேர விசாரணைக்கு பின், பகல் 2:00 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை வட்டாரத்தில் கூறியதாவது: சிறப்பு மருத்துவக் குழுவினர் விசாரணை அறிக்கையை ஓரிரு நாளில் அரசிடம் சமர்ப்பிப்பர். அதில், 'மாணவருக்கு சிகிச்சை அளிப்பதில் யாராவது தவறு செய்தது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவன் குடித்த விஷம் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு கூறப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X