இந்தியாவில் 'ரீ என்ட்ரி' கொடுக்கும் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்!

Updated : செப் 07, 2022 | Added : செப் 07, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
இந்தியாவில் மீண்டும் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 1960களில் இந்தியாவில் சாலைகளை ஆட்சி செய்த பிரபலமான ஸ்கூட்டர் மாடல்களில் இத்தாலிய ஸ்கூட்டர் பிராண்டான லம்ப்ரெட்டா ஸ்கூட்டரும் ஒன்று. அப்போதைய காலத்தில் பெரும்பாலான இந்தியர்களின் முதல் தேர்வாக இந்த லம்ப்ரெட்டா ஸ்கூட்டர் வலம் வந்தது. இந்த நிலையில் புதிய
Dinamalar, Automobiles, lambretta_Scooters, தினமலர், ஆட்டோமொபைல், லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்

இந்தியாவில் மீண்டும் லம்ப்ரெட்டா ஸ்கூட்டர் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

1960களில் இந்தியாவில் சாலைகளை ஆட்சி செய்த பிரபலமான ஸ்கூட்டர் மாடல்களில் இத்தாலிய ஸ்கூட்டர் பிராண்டான லம்ப்ரெட்டா ஸ்கூட்டரும் ஒன்று. அப்போதைய காலத்தில் பெரும்பாலான இந்தியர்களின் முதல் தேர்வாக இந்த லம்ப்ரெட்டா ஸ்கூட்டர் வலம் வந்தது. இந்த நிலையில் புதிய அவதாரமாக லாம்ப்ரெட்டா நிறுவனம் தற்போது பேர்டு மொபிலிட்டி (Bird mobility company) நிறுவனத்துடன் இணைந்து மீண்டும் இந்தியாவில் களமிறங்க உள்ளது.

இந்த ஸ்கூட்டர்கள் G, V, X ஆகிய மூன்று வேரியண்ட்களில் 200 மற்றும் 350cc ஸ்கூட்டர்களாக வெளியாகவுள்ளது. இது வரும் 2023 ம் ஆண்டு வெளியாகும். அதுமட்டுமல்லாமல் இந்நிறுவனம் 2024 ஆம் ஆண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் வெளியிடவுள்ளது.


latest tamil newsஇந்தியாவில் களமிறங்குவதன் மூலம் உள்நாட்டிலேயே தனது வாகன உற்பத்தியை துவங்க லம்ப்ரெட்டா முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் 51 சதவிகிதம் லம்ப்ரெட்டா நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும் 49 சதவிகிதம் பேர்டு க்ருப் கட்டுப்பாட்டிலும் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது உலகின் 70 நாடுகளில் லம்ப்ரெட்டா வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. உலகம் முழுக்க சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிக ஸ்கூட்டர்களை லம்ப்ரெட்டா விற்பனை செய்து இருக்கிறது. இந்தியாவில் களமிறங்குவதன் மூலம் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றே தெரிகிறது.latest tamil news2023 ஆம் ஆண்டு இந்திய வாகன சந்தையில் நுழைய தேவையான யூனிட்களின் இறக்குமதிகள் மற்றும் மூலப்பொருட்கள் இறக்குமதியில் லம்ப்ரெட்டா நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது. 2024 ஆம் ஆண்டு முற்றிலும் மேட் இன் இந்தியா தயாரிப்புகளாக லம்ப்ரெட்டா ஸ்கூட்டர்ஸ் உருவாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தடம் பதித்துள்ள லம்ப்ரெட்டா நிறுவனம் தற்போது கிட்டத்தட்ட 70 நாடுகளில் தனது விற்பனையை அதிகரித்துள்ளது.latest tamil newsஇந்த ஸ்கூட்டர் ஒரு பிரீமியம் ஸ்கூட்டராக வெளியாகும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை தற்போது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களை விட 20% அதிக விலையில் இருக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Bangalore,இந்தியா
08-செப்-202213:51:51 IST Report Abuse
raja இன்றய சாலைகள் இருக்கும் லட்சணத்தில், மீண்டும் 12 இன்ச் வீலோடு வந்தால் மக்கள் ஒதுக்கி வைத்து விடுவார்கள். குறைந்தது 16 இன்ச் வீலுடன் வந்தால் மட்டுமே யோசிக்கலாம். இல்லையென்றால் பைக்கு தான் சரி.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
08-செப்-202212:48:40 IST Report Abuse
Bhaskaran அந்த காலத்தில் நடுத்தர உயர்வர்க்கத்தினர் கணவன் மனைவி இருவரும் பணிக்குபோகிறவர்கள் ஆகியோர் இந்த வண்டியை வைத்திருப்பார்கள்
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
08-செப்-202206:07:27 IST Report Abuse
Elango ஓட்டு போட்ட ஏழை மக்கள் செல்ல குறைந்த விலையில் ஒரு வண்டி கொண்டு வாங்க...
Rate this:
08-செப்-202207:51:38 IST Report Abuse
ராஜாகாசுக்கும், ஓசி பிரியாணிக்கும், குவாட்டருக்கும் ஓட்டு விற்றால் கால்நடையாகத்தான் போக வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X