குறுவையை தொடர்ந்து சம்பா சாகுபடி டெல்டா விவசாயிகள் ஆர்வம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
சென்னை:குறுவை சாகுபடியை தொடர்ந்து, சம்பா பருவ நெல் சாகுபடி பணியில், டெல்டா விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கிஉள்ளனர்.டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி முக்கியமானது. இப்பருவங்களில் விளையும் நெல், அரசின் உணவு தானிய திட்டத்திற்கு அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது.நடப்பாண்டு, மேட்டூர் அணையில் மே 24ல், முன்கூட்டியே குறுவை பாசனத்திற்கு தண்ணீர்

சென்னை:குறுவை சாகுபடியை தொடர்ந்து, சம்பா பருவ நெல் சாகுபடி பணியில், டெல்டா விவசாயிகள் ஆர்வம் காட்ட துவங்கிஉள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி முக்கியமானது. இப்பருவங்களில் விளையும் நெல், அரசின் உணவு தானிய திட்டத்திற்கு அதிகம் கொள்முதல் செய்யப்படுகிறது.நடப்பாண்டு, மேட்டூர் அணையில் மே 24ல், முன்கூட்டியே குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
தொடர்ச்சியாக நீர் திறக்கப்பட்டாலும், மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறையவில்லை.அதன் முழு கொள்ளளவான 93.4 டி.எம்.சி.,க்கு நீர் இருப்பு உள்ளது. அதிகம் நீர் திறப்பதை பயன்படுத்தி, டெல்டா மாவட்டங்களில், 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களின் இயல்பான குறுவை சாகுபடி பரப்பு 3 லட்சம் ஏக்கர் தான். தற்போது, குறுவை பருவ நெல் அறுவடை பல இடங்களில் நடந்து வருகிறது. அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்களும் திறக்கப்பட்டு உள்ளன.
இதனிடையே, குறுவையை தொடர்ந்து சம்பா பருவ நெல் சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்த துவங்கி உள்ளனர். வழக்கமாக செப்., 15க்கு பின், இப்பருவத்திற்கான நடவு பணிகள் துவங்கும்.ஆனால், பாசன பற்றாக்குறை தீர்ந்துள்ளதால், முன்கூட்டியே சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்த துவங்கிஉள்ளனர்.
இதுவரை 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பருவ நடவுப் பணிகள் முடிந்துள்ளது.சம்பா சாகுபடி பருவத்தில் 12 லட்சம் ஏக்கர் சாகுபடி நடக்கும். நடப்பாண்டு, சாகுபடி பரப்பு 14 லட்சம் ஏக்கரை எட்டும் என வேளாண் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X