ரேஷன் ஊழியர் சம்பளத்தில் மளிகைக்கு பணம் பிடிக்க தடை

Added : செப் 07, 2022 | |
Advertisement
சென்னை:நம் நாளிதழ் செய்தியை அடுத்து, 'ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளத்தில் மளிகை பொருட்கள் வாங்க, பணம் பிடித்தம் செய்யக் கூடாது' என, கூட்டுறவு சங்கங்களுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடை, பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றை நடத்துகின்றன. கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ், ரேஷன் கடைகளில் மளிகை

சென்னை:நம் நாளிதழ் செய்தியை அடுத்து, 'ரேஷன் கடை ஊழியர்களின் சம்பளத்தில் மளிகை பொருட்கள் வாங்க, பணம் பிடித்தம் செய்யக் கூடாது' என, கூட்டுறவு சங்கங்களுக்கு, கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடை, பல்பொருள் அங்காடிகள் போன்றவற்றை நடத்துகின்றன. கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ், ரேஷன் கடைகளில் மளிகை விற்கப்படுகின்றன.அவற்றை கார்டுதாரர்கள் வாங்காத நிலையில், ரேஷன் ஊழியர்களை வாங்க சொல்லி அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.
இதற்காக, அவர்களின் சம்பளத்தில் இருந்து மாதம், 1,000 ரூபாய் வரை பிடித்தம் செய்யப்படு கிறது. சம்பள ரசீதும் வழங்கப் படுவதில்லை.இது குறித்து, நம் நாளிதழில், இம்மாதம் 2ம் தேதி செய்தி வெளியானது. இந்த செய்தியை மேற்கோள் காட்டி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கூட்டுறவு ரேஷன் கடை, அங்காடி, மருந்தகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து, மளிகை பொருட்கள் வாங்க கோரி, எவ்வித கட்டாய பிடித்தமும் மேற்கொள்ள கூடாது.
ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பள ரசீது முறையாக வழங்க வேண்டும். அதில், பிடித்தங்களை, விபரமாக பட்டியலிட வேண்டும். இந்த அறிவுரைகளை தவறாது பின்பற்றுமாறு, தங்கள் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களை அறிவுறுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X