சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

நல்ல வேட்டை தான்!

Added : செப் 07, 2022 | |
Advertisement
நல்ல வேட்டை தான்!'இந்த மாதிரி வி.ஐ.பி.,க்கள் எல்லா சிறைகளுக்கும் வந்தால், நம்மை போன்றவர்களுக்கு கொண்டாட்டம் தான்...' என, மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர், மேற்கு வங்க மாநில சிறை கைதிகள்.இம்மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மம்தா அரசில் அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில் கைது


 அக்கம் பக்கம்


நல்ல வேட்டை தான்!



'இந்த மாதிரி வி.ஐ.பி.,க்கள் எல்லா சிறைகளுக்கும் வந்தால், நம்மை போன்றவர்களுக்கு கொண்டாட்டம் தான்...' என, மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர், மேற்கு வங்க மாநில சிறை கைதிகள்.இம்மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மம்தா அரசில் அமைச்சராக இருந்த பார்த்தா சட்டர்ஜி, ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். திரிணமுல் காங்., மூத்த நிர்வாகியான அனுப்ரதா மொண்டல், கால்நடை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவருமே, மேற்கு வங்கத்தில் உள்ள அசன்சோல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே, அசைவ சாப்பாடு வழங்கப்பட்டு வந்தது. அதுவும், தரமற்ற சிக்கன் உணவு மட்டுமே வழங்கப்படும்.
ஆனால், இந்த வி.ஐ.பி.,க்கள் இருவரும் அசைவ பிரியர்கள். மட்டன் இல்லாமல், அவர்களுக்கு சாப்பாடு தொண்டைக்குள் இறங்காது. இவர்களுக்கு மட்டும் மட்டன் சாப்பாடு வழங்கினால், பிரச்னை ஏற்படும் என்பதால், சிறையில் உள்ள எல்லா கைதிகளுக்கும் இப்போது வழங்கப்படுகிறது. வாரத்தில் பெரும்பாலான நாட்கள் மட்டன் சாப்பாடு வழங்கப்படுவதால், சிறையில் உள்ள கைதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 'சிறைக்கு மேலும் பல அரசியல் கைதிகள் வர வேண்டும்;
அப்படி வந்தால், எங்கள் நாக்கிற்கு நல்ல வேட்டை தான்...' என்றும் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X