சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 07, 2022 | |
Advertisement
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி: தி.மு.க., ஆட்சியில், ஒன்றரை ஆண்டில் கோவைக்கு ஒன்றுமே செய்யவில்லை. கோவை வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, 50 சதவீதம் முடிந்திருக்கிறது. ஏதோ உள்நோக்கத்தோடு நிறுத்தி வைத்திருக்கின்றனர்; தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். டவுட் தனபாலு: அந்த பஸ் ஸ்டாண்ட்டை கட்டி முடிச்சிட்டா, அ.தி.மு.க., புள்ளிகளின் ரியல் எஸ்டேட் தொழில் சூடு

'டவுட்' தனபாலு

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி: தி.மு.க., ஆட்சியில், ஒன்றரை ஆண்டில் கோவைக்கு ஒன்றுமே செய்யவில்லை. கோவை வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி, 50 சதவீதம் முடிந்திருக்கிறது. ஏதோ உள்நோக்கத்தோடு நிறுத்தி வைத்திருக்கின்றனர்; தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

டவுட் தனபாலு: அந்த பஸ் ஸ்டாண்ட்டை கட்டி முடிச்சிட்டா, அ.தி.மு.க., புள்ளிகளின் ரியல் எஸ்டேட் தொழில் சூடு பிடிச்சிடுமே... அது கூடாதுன்னு தான், திட்டத்தை நிறுத்தியிருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: புதுச்சேரி சிறிய மாநிலம். அங்கு நாம், 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது; 10 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். ஒரு எம்.பி., சீட் பெறுவோம் என, ஜோதிடர் கூறியுள்ளார். அதேபோன்று, தொண்டர்களாகிய உங்களுடைய செயல்பாட்டில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். நம் ஆட்சி புதுச்சேரியில் மலரும்.

டவுட் தனபாலு: தமிழகத்துல, அன்புமணி தலைமையில் ஆட்சி அமைப்பது சிரமம்னு தெரிஞ்சு தான், வண்டியை புதுச்சேரி பக்கம் திருப்பிட்டீங்களோ என்ற, 'டவுட்' ஏற்படுதே!

பாரத் ஹிந்து முன்னணி மாநில செயலர் டில்லிபாபு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார்: சென்னையில் அரசு கல்லுாரி ஒன்றில் நடந்த, தி.மு.க., நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன், விநாயகர் மற்றும் பார்வதி குறித்து அவதுாறாக பேசியுள்ளார். இது, ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. முத்தரசன் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டவுட் தனபாலு: நீங்க புகார் குடுத்துட்டா, நாளைக்கே முத்தரசன் மீது நடவடிக்கை எடுத்துடுவாங்களா... ஆளுங்கட்சிக்கு ஆலவட்டம் சுத்திட்டு இருக்கிற அவரை, போலீசார் ஒப்புக்கு சப்பாணியா கூட விசாரிக்க மாட்டாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X