கணியூர் ஊராட்சிக்கு பிளாஸ்டிக் கிரஷிங் இயந்திரம் வழங்கல்

Added : செப் 07, 2022 | |
Advertisement
கருமத்தம்பட்டி : கணியூர் ஊராட்சிக்கு தனியார் நிறுவனம் சார்பில், 'பிளாஸ்டிக் கிரஷிங்' இயந்திரம் வழங்கப்பட்டது.கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை திட்ட துவக்க விழா மற்றும் பிளாஸ்டிக் கிரஷிங் இயந்திரம் வழங்கல் துவக்க விழா நடந்தது.தட்டாம்புதுார் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, ஊராட்சி தலைவர்
கணியூர் ஊராட்சிக்கு பிளாஸ்டிக் கிரஷிங் இயந்திரம் வழங்கல்

கருமத்தம்பட்டி : கணியூர் ஊராட்சிக்கு தனியார் நிறுவனம் சார்பில், 'பிளாஸ்டிக் கிரஷிங்' இயந்திரம் வழங்கப்பட்டது.

கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சியில், துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், திடக்கழிவு மேலாண்மை திட்ட துவக்க விழா மற்றும் பிளாஸ்டிக் கிரஷிங் இயந்திரம் வழங்கல் துவக்க விழா நடந்தது.தட்டாம்புதுார் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, ஊராட்சி தலைவர் வேலுசாமி துவக்கிவைத்தார். கணியூரில், தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட பிளாஸ்டிக் கிரஷிங் இயந்திரம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. குப்பை தரம் பிரிக்கும் கூடம் திறந்து வைக்கப்பட்டது.

ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் பொருட்கள், இயந்திரத்தில் அரைக்கப்பட்டு, மறு சுழற்சிக்கு அனுப்பப்படுகிறது. அதேபோல், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை தரம் பிரிக்கும் பணியும் துவக்கி வைக்கப்பட்டது. மக்கும் குப்பை, மக்காத குப்பையை வீடுகளில் தனித்தனியாக சேகரித்து வழங்க, ஊராட்சி நிர்வாகம் சார்பில், பொதுமக்களுக்கு, கூடைகள் வழங்கப்பட்டன.தனியார் நிறுவன அலுவலர்கள், வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X