போலீசார் தாக்கியதில் பலியானவர் மனைவிக்கு இழப்பீடு

Added : செப் 07, 2022 | |
Advertisement
சென்னை:போலீசார் தாக்கியதில் பலியானவரின் மனைவிக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முருகன் என்பவரை, சமயபுரம் போலீசார் கைது செய்து, லாட்ஜில் அடைத்து வைத்திருந்தனர். 2019 டிச., 13ல் கைது செய்யப் பட்ட முருகன், 15-ம் தேதி மரணமடைந்தார். போலீசார் கடுமையாக தாக்கியதால் தான்

சென்னை:போலீசார் தாக்கியதில் பலியானவரின் மனைவிக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய முருகன் என்பவரை, சமயபுரம் போலீசார் கைது செய்து, லாட்ஜில் அடைத்து வைத்திருந்தனர். 2019 டிச., 13ல் கைது செய்யப் பட்ட முருகன், 15-ம் தேதி மரணமடைந்தார். போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் முருகன் மரணம் அடைந்ததாக கூறி, அவரது உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது பற்றிய செய்திகள் நாளிதழ்களில் வெளியானது. அதன் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து, விசாரணைக்கு எடுத்து கொண்டது. திருவெறும்பூரை சேர்ந்த ரத்தினம் என்பவரும், இது தொடர்பாக ஆணையத்தில் புகார் மனு அளித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: திருச்சி நடுவர் நீதிமன்ற நீதிபதியின் விசாரணை அறிக்கை, மனித உரிமைகள் ஆணைய புலன் விசாரணை பிரிவு விசாரணை அறிக்கையில் இருந்தும், போலீசார் தாக்கியதால் தான் முருகன் இறந்திருக்கிறார் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.
போலீசார் மனித உரிமையை மீறியுள்ளனர். எனவே, முருகனின் மனைவி சரசுக்கு, தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சமயபுரம் இன்ஸ்பெக்டர் மதன், திருச்சி ராம்ஜி நகர் எஸ்.ஐ., செந்தில்குமார் ஆகியோரிடம் இருந்து தலா 2 லட்சம் ரூபாய்; மற்ற நான்கு போலீசாரிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாயையும் திரும்ப பெறலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X