நிழற்குடைகளில் இருக்கை சீரமைப்பு| Dinamalar

நிழற்குடைகளில் இருக்கை சீரமைப்பு

Added : செப் 07, 2022 | |
திருத்தணி:நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, நகராட்சி பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் பழுதடைந்து இருந்த இருக்கைகள் சீரமைக்கப்பட்டன.திருத்தணி நகராட்சியில், மேல்திருத்தணி மற்றும் முருகூர் ஆகிய பேருந்து நிறுத்தத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில், தலா, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், ஏற்படுத்தப்பட்ட பயணியர் நிழற்குடையில் இருக்கைகள் சேதம் அடைந்திருந்தன.இதனால்
நிழற்குடைகளில் இருக்கை சீரமைப்பு

திருத்தணி:நம் நாளிதழில் வெளியான செய்தியையடுத்து, நகராட்சி பேருந்து நிறுத்த நிழற்குடைகளில் பழுதடைந்து இருந்த இருக்கைகள் சீரமைக்கப்பட்டன.

திருத்தணி நகராட்சியில், மேல்திருத்தணி மற்றும் முருகூர் ஆகிய பேருந்து நிறுத்தத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில், தலா, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், ஏற்படுத்தப்பட்ட பயணியர் நிழற்குடையில் இருக்கைகள் சேதம் அடைந்திருந்தன.இதனால் பயணியர், பேருந்து வரும் வரை உட்காருவதற்கு முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.

குறிப்பாக வயதான பயணியர் நீண்ட நேரம் நிற்க முடியாமல் தவித்தனர்.இது குறித்தான செய்தி வெளியானதையடுத்து, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மேற்கண்ட இரண்டு பேருந்து நிறுத்த நிழற்குடைகளில், புதியதாக பயணியர் உட்காருவதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X