பாரம்பரிய முறையில் ஓணம் விழா கோலாகலம்| Dinamalar

பாரம்பரிய முறையில் ஓணம் விழா கோலாகலம்

Added : செப் 07, 2022 | |
உடுமலை, பொள்ளாச்சியில் பாரம்பரிய முறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.உடுமலை அந்தியூர் கமலம் கலை அறிவியல் கல்லுாரியில், ஓணம் திருநாளையொட்டி, பைன் ஆர்ட்ஸ் கிளப் மற்றும் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டன.கல்லுாரி முதல்வர் பிருந்தா தலைமை, செயலாளர் சஞ்சீவ் முன்னிலை வகித்தார். முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் பிரியா வரவேற்றார். தொடர்ந்து,

உடுமலை, பொள்ளாச்சியில் பாரம்பரிய முறையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.உடுமலை அந்தியூர் கமலம் கலை அறிவியல் கல்லுாரியில், ஓணம் திருநாளையொட்டி, பைன் ஆர்ட்ஸ் கிளப் மற்றும் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டன.கல்லுாரி முதல்வர் பிருந்தா தலைமை, செயலாளர் சஞ்சீவ் முன்னிலை வகித்தார். முன்னதாக தமிழ்த்துறைத் தலைவர் பிரியா வரவேற்றார். தொடர்ந்து, நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.கும்மியாட்டம், கதகளி, பரதம், தனிநபர் நடனம் என, மாணவ, மாணவியர் தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். தவிர, பூக்கோலம், பாரம்பரிய உணவு தயாரிப்பு போட்டிகளும் நடத்தப்பட்டன.இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் வைரமுத்து, கீதாமணி ஆகியோர் செய்திருந்தனர். வேதியல்துறை கோமதி நன்றி கூறினார்.* உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரியில், ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, மாணவ, மாணவியர் பூக்கோலமிட்டு அசத்தினர். தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.இதில், கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ராஜலட்சுமி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் கயிறு வாரிய மண்டல அலுவலகம் செயல்படுகிறது. இங்கு, மண்டல அலுவலர் (பொறுப்பு) சாபு தலைமையில், அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.அலுவலக முகப்பில் அத்தப்பூ கோலம் இட்டனர். தொடர்ந்து, கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட கோளிக்கை விளையாட்டுகள் நடத்தி, விருந்து ஏற்பாடு செய்து கொண்டத்தை நிறைவு செய்தனர்.* வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடந்தது. போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், ஓவிய ஆசிரியர் துரைராஜ் ஆகியோர் பரிசு வழங்கினர்.* வால்பாறை அரசு கலை மற்றும் அறியவில் கல்லுாரியில், ஓணப்பண்டிகையையொட்டி, மாணவர்களுக்கு இடையேயான ஓவியப்போட்டி நடந்தது. தொடர்ந்து மாணவியர் கல்லுாரி வகுப்பறையின் முன்பு பூக்கோலமிட்டு, அசத்தினர்.- நமது நிருபர் குழு-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X