வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்| Dinamalar

வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Added : செப் 07, 2022 | |
திருத்தணி:வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.திருத்தணி அடுத்த, பீரகுப்பம் கிராமத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின், திருப்பணிகள் நடந்து, மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதற்காக, கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன. கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு
வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

திருத்தணி:வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

திருத்தணி அடுத்த, பீரகுப்பம் கிராமத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின், திருப்பணிகள் நடந்து, மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. இதற்காக, கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தன.

கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு புதியதாக அமைக்கப்பட்ட கோவில் கோபுரத்தின் மீது கலச நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.பின் அங்கிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X