கிசான் சம்மான் நிதி திட்டம்; முகாமில் 324 பேர் பதிவு

Added : செப் 07, 2022 | |
Advertisement
சூலுார் : கிசான் சம்மான் நிதி திட்டத்தில், சூலுார் வட்டாரத்தை சேர்ந்த, 324 விவசாயிகள் ஆவணங்களை பதிவு செய்து கொண்டனர்.மத்திய அரசு சார்பில், கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதுவரை, 11 தவணைகள் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.நிதி பெறும் விவசாயிகள், தங்கள் ஆதார், சிட்டா

சூலுார் : கிசான் சம்மான் நிதி திட்டத்தில், சூலுார் வட்டாரத்தை சேர்ந்த, 324 விவசாயிகள் ஆவணங்களை பதிவு செய்து கொண்டனர்.

மத்திய அரசு சார்பில், கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதுவரை, 11 தவணைகள் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.நிதி பெறும் விவசாயிகள், தங்கள் ஆதார், சிட்டா உள்ளிட்ட ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும், என, அரசு அறிவித்தது.

இதையடுத்து, பல விவசாயிகள் ஆவணங்களை பதிவு செய்தனர். பதிவு செய்யாத விவசாயிகள் பயன் பெறும் வகையில், சூலுார் வட்டாரத்தில், பல இடங்களில் வேளாண்துறை சார்பில் முகாம் நடத்தப்பட்டது. இதில், 324 விவசாயிகள் ஆவணங்களை பதிவு செய்து கொண்டனர். வேளாண் துறை துணை இயக்குனர் கிருஷ்ணவேணி, சூலுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜய கல்பனா ஆகியோர் முகாம்களில் ஆய்வு மேற்கொண்டனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X