கொசஸ்தலை வெள்ளம் கிராமங்களில் புகுவதை தடுக்க...புது முயற்சி!:3 இடங்களில் தடுப்பு சுவர் ஏற்படுத்தும் பணிகள் தீவிரம்:பருவ மழைக்கு முன்னதாக முடிக்க அதிகாரிகள் திட்டம்| Dinamalar

கொசஸ்தலை வெள்ளம் கிராமங்களில் புகுவதை தடுக்க...புது முயற்சி!:3 இடங்களில் தடுப்பு சுவர் ஏற்படுத்தும் பணிகள் தீவிரம்:பருவ மழைக்கு முன்னதாக முடிக்க அதிகாரிகள் திட்டம்

Added : செப் 07, 2022 | |
பள்ளிப்பட்டு:பருவ மழை, அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து செல்லும் போது, கரையோரம் உள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதை தடுக்கும் வகையில், பொதுப்பணித் துறையினர் முதற்கட்டமாக மூன்று இடங்களில் ஆற்றின் கரைகளில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை துரித வேகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். பருவ
கொசஸ்தலை வெள்ளம் கிராமங்களில் புகுவதை தடுக்க...புது முயற்சி!:3 இடங்களில் தடுப்பு சுவர் ஏற்படுத்தும் பணிகள் தீவிரம்:பருவ மழைக்கு முன்னதாக முடிக்க அதிகாரிகள் திட்டம்

பள்ளிப்பட்டு:பருவ மழை, அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து செல்லும் போது, கரையோரம் உள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்து விடுகிறது.

இதை தடுக்கும் வகையில், பொதுப்பணித் துறையினர் முதற்கட்டமாக மூன்று இடங்களில் ஆற்றின் கரைகளில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளை துரித வேகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். பருவ மழைக்கு முன்னதாக பணிகளை முடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே, லவா, குசா ஆறுகள் ஒன்றாக இணைந்து, கொசஸ்தலை ஆறாக உருவெடுத்து வெளியகரம், பெருமாநல்லுார், சொரக்காய்பேட்டை, புண்ணியம், நல்லாட்டூர், லட்சுமாபுரம் வழியாக, நாராயணபுரம் அருகே பூண்டி நீர்த்தேக்கத்திற்கு சென்றடைகிறது.


பள்ளம் உருவானதுஆண்டுதோறும் பருவ மழையின் போதும் ஆந்திர மாநிலம், கிருஷ்ணாபுரம் அம்மப்பள்ளி அணைக்கட்டில் திறந்து விடப்படும் போதும் தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. இதனால், சில பகுதிகளில் ஆற்றின் ஓரம் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து விடுகிறது.அந்த வகையில், கடந்தாண்டு நவம்பர் மாதம் பெய்த கன மழையின் போது, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

இதனால், மேலப்பூடி மற்றும் சொரக்காய்பேட்டை இடையே, ஆற்றின் ஓட்டம் திசை மாறியது. தெற்கு கரையில் உடைப்பு ஏற்பட்டதால், வெள்ளம், சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்குள் புகுந்தது.இதனால், பள்ளி கட்டடத்தின் அடித்தளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டது. மேலும், வகுப்பறைக்குள், 10 ஆடி ஆழத்திற்கு திடீர் பள்ளம் உருவானது. இதை பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைத்தனர்.அதே நேரத்தில், இடிந்து விழுந்த பள்ளியின் சுற்றுச்சுவர் சீரமைக்கப்படவில்லை. இடிபாடுகளும் அகற்றப்படவில்லை.


பள்ளி சுற்றுச்சுவர்மேலும், கொசஸ்தலை ஆற்றில் இருந்து, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் நீரேற்று நிலையமும், பெருமளவில் பாதிக்கப்பட்டது.சுற்றுச்சுவர் மற்றும் தரையில் புதைக்கப்பட்டுஇருந்த குடிநீர் குழாய்கள் உடைந்தன. இதில், குழாய்கள் மட்டும் உடனடியாக சீரமைக்கப்பட்டன.சில நாட்களுக்கு முன் நீரேற்று நிலையத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்பட்டது. இதேபோல், 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது, சொரக்காய்பேட்டை ஆற்றங்கரையை ஒட்டி உள்ள இருளர் குடியிருப்புக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.


மாற்று இடம்அங்கு வசித்து வந்தவர்கள், வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். பின் அவர்களுக்கு கீழப்பூடி அருகே மாற்று இடம் வழங்கப்பட்டு, குடியமர்த்தப்பட்டனர்.ஒவ்வொரு பருவ மழை மற்றும் அம்மப்பள்ளி அணைக்கட்டு திறக்கும் போதும், கொசஸ்தலை ஆற்றில் ஏற்படும் வெள்ளத்தால், கரையோர கிராம மக்கள் அச்சத்தில் வசித்து வருகின்றனர்.கிராம மக்கள் அச்சத்தை போக்கும் வகையில், திருத்தணி பொதுப்பணித் துறையினர் முதற்கட்டமாக மூன்று இடங்களில் ஆற்றின் கரைக்கு தடுப்பு சுவர் ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டுஉள்ளனர்.


மணல் மூட்டைகள்குறிப்பாக, மேலப்பூடி மற்றும் மேலப்பூடி கிராமத்திற்கு மேற்கு பகுதியில், மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, களிமண் கொண்டு ஆறு இடங்களில் கரையை வலுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.சொரக்காய்பேட்டை கிராமத்தின் வடக்கே, ஆற்றின் வெள்ளம், முற்றிலுமாக திசை மாறிய பகுதியில் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது.மேலும், சொரக்காய்பேட்டை சுடுகாடு பகுதியிலும், வெள்ள தடுப்பு சுவர் அமைப்பதற்கு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேற்கண்ட மூன்று இடங்களில் ஏற்படுத்தப்படும் தடுப்பு சுவர் பணிகளை பருவ மழை துவங்குவதற்கு முன் முழுமைப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு, தீவிரம் காட்டி வருகின்றனர்.

துரித வேகத்தில் பணிகள்கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, கிராமங்கள் மற்றும் பள்ளி வளாகத்தில் தண்ணீர் புகுந்து விடுவதை தவிர்க்க, 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூன்று இடங்களில் தடுப்பு சுவர் கட்டும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகின்றன. ஆற்றின் வடக்கு பகுதியில் மணல் அதிகளவில் உள்ளதை சமன் செய்யும் பணிகள் நடந்துள்ளன. தெற்கு கரை பலவீனமாக இருந்த பகுதியிலும், உறுதிப்படுத்தும் பணிகள் தற்போது துரித வேகத்தில் நடந்து வருகின்றன. பருவ மழை தீவிரம் அடையும் முன்பாக மேற்கண்ட பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.

- -ஏ.எம்.சுந்தரம், இளநிலை பொறியாளர், பள்ளிப்பட்டு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X