மின் கோபுரங்கள் ஆய்வு செய்யப்படுமா?| Dinamalar

மின் கோபுரங்கள் ஆய்வு செய்யப்படுமா?

Added : செப் 07, 2022 | |
சென்னை:மேட்டூர் உட்பட பல அணைகளில் இருந்து, அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், நீர்நிலைகளை ஒட்டி செல்லும் மின் கோபுரங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.தமிழக மின் வாரியம், மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, பல அடி உயரம் உள்ள மின் கோபுர வழித்தடங்கள் வாயிலாக, பல்வேறு இடங்களில் இருக்கும் துணை மின்

சென்னை:மேட்டூர் உட்பட பல அணைகளில் இருந்து, அதிக தண்ணீர் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், நீர்நிலைகளை ஒட்டி செல்லும் மின் கோபுரங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழக மின் வாரியம், மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, பல அடி உயரம் உள்ள மின் கோபுர வழித்தடங்கள் வாயிலாக, பல்வேறு இடங்களில் இருக்கும் துணை மின் நிலையங்களுக்கு எடுத்து செல்கிறது. மின் கோபுரங்கள், வனப் பகுதிகள், ஆறு, ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை ஒட்டியும், அவற்றின் மேலும் அமைக்கப்பட்டுள்ளன.


புயல், நிலச்சரிவின்போது மின் கோபுரம் முறிந்து விழும்போது, அந்த வழித்தடத்தில் மின்சாரம் தடைபடுகிறது. இந்த சீசனில் மேற்கு தொடர்ச்சி பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால், கர்நாடகா மாநிலம் மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் சேலம் மாவட்டம், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.


எனவே, மேட்டூர் அணையில் இருந்து அதிக நீர் திறந்து விடப்படுகிறது. இதேபோல், பல அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதிக மழை பொழிவால் நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய, வன பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.


இதனால், நீர்நிலைகளை ஒட்டிய மற்றும் வன பகுதிகளில் உள்ள பல மின் கோபுரங்கள், மண் அரிப்பு காரணமாக பலவீனம் அடைந்து உள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நீர்நிலைகளை ஒட்டிய மின் கோபுரங்களும், அதன் வழித்தடங்களும் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன. சேதமடைந்திருக்கும் மின் கோபுரங்களுக்கு அடியில், சிமென்ட் கலவை போட்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X