தொடரும் ஒயர் திருட்டு விவசாயிகள் வேதனை; தோட்டங்களில் தொடரும் ஒயர் திருட்டு விவசாயிகள் வேதனை

Added : செப் 07, 2022 | |
Advertisement
அன்னுார் : அன்னுார் பகுதியில் தோட்டங்களில் தொடரும் மின் ஒயர் திருட்டால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.அன்னுார் வட்டாரத்தில், 21 ஊராட்சி மற்றும் பேரூராட்சியில் 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தோட்டங்களில் கிணறுகளுக்கு செல்லும் மின்சார ஒயர்களை துண்டித்து காப்பர் ஒயர்களை திருடுவது அதிகரித்துள்ளது.கரியாம்பாளையம்,

அன்னுார் : அன்னுார் பகுதியில் தோட்டங்களில் தொடரும் மின் ஒயர் திருட்டால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

அன்னுார் வட்டாரத்தில், 21 ஊராட்சி மற்றும் பேரூராட்சியில் 25 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தோட்டங்களில் கிணறுகளுக்கு செல்லும் மின்சார ஒயர்களை துண்டித்து காப்பர் ஒயர்களை திருடுவது அதிகரித்துள்ளது.கரியாம்பாளையம், கிருஷ்ண கவுண்டன் புதுார், வடக்கலுார், பொன்னே கவுண்டன்புதுார் என பல இடங்களில், 50 மீட்டர் முதல் 100 மீட்டர் நீளம் வரை உள்ள காப்பர் ஒயர்களை இரவு நேரத்தில் துண்டித்து திருடி சென்று விட்டனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஒயரை வெட்டி எடுத்துச் செல்வோருக்கு ஒரு நேரத்திற்கான மதுபாட்டிலுக்கான தொகை தான் கிடைக்கும். ஆனால் விவசாயிகள் பல ஆயிரம் ரூபாய் செலவழித்து தான் கிணற்றுக்கு மின் இணைப்பு தர வேண்டியுள்ளது. திருட்டை தடுக்க போலீசார் ரோந்து செல்வதை அதிகரிக்க வேண்டும். சந்தேக நபர்களை பிடித்து விசாரிக்க வேண்டும். பழைய காப்பர் ஒயர்களை விலைக்கு வாங்குவோரை கண்காணிக்க வேண்டும், ஏற்கனவே விளை பொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை இல்லாததால் சிரமத்தில் உள்ள விவசாயிகள் மின் ஒயர்த்திருட்டால் மேலும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளோம்,' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X