நுாற்றாண்டு கண்ட சைதை மருத்துவமனையில்ஒருங்கிணைந்த ஆய்வகம் அமைக்க முடிவு

Updated : செப் 07, 2022 | Added : செப் 07, 2022 | |
Advertisement
சைதாப்பேட்டை, நுாற்றாண்டை கடந்த சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில், 10 கோடி ரூபாயில் குழந்தைகள் சிகிச்சை மற்றும் 2 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த ஆய்வகம் கட்டப்பட உள்ளது.சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, 1920ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆதம்பாக்கம், வேளச்சேரி, ஆலந்துார், சைதாப்பேட்டை, தி.நகர் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த மருத்துவமனையை நாடுகின்றனர்.விபத்து உயிர்

சைதாப்பேட்டை, நுாற்றாண்டை கடந்த சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில், 10 கோடி ரூபாயில் குழந்தைகள் சிகிச்சை மற்றும் 2 கோடி ரூபாயில், ஒருங்கிணைந்த ஆய்வகம் கட்டப்பட உள்ளது.

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை, 1920ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆதம்பாக்கம், வேளச்சேரி, ஆலந்துார், சைதாப்பேட்டை, தி.நகர் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த மருத்துவமனையை நாடுகின்றனர்.விபத்து உயிர் காக்கும் முதலுதவி மருத்துவமனையாகவும் செயல்படுகிறது.

இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை உள்ளது.கடந்த, 2017ம் ஆண்டு, 40 கோடி ரூபாயில் எட்டடுக்கு மாடி கட்டடம் கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதற்காக, அங்கிருந்த ஓட்டு கட்டடம் இடிக்கப்பட்டது. அரசியல் தலையீட்டால், புதிய கட்டடம் கட்டுவதற்கான கோப்புகள் கிடப்பில் போடப்பட்டன. இடநெருக்கடி அதிகரித்ததால், 2018ம் ஆண்டு, சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 54 லட்சம் ரூபாயில், 'எக்ஸ்ரே' அறை கட்டி, இயந்திரம் வாங்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தால், நுாற்றாண்டு கண்ட இந்த மருத்துவமனையை தரம் உயர்த்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், 'டயாலிசிஸ்' மையம் திறக்கப்பட்டது.அடுத்த கட்டமாக, குழந்தைகளுக்கான மருத்துவமனை கட்ட, 10 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஆய்வகம் கட்ட, 2 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் ஆய்வகத்தால், சைதாப்பேட்டை, தி.நகர், வேளச்சேரி, அடையாறு, தரமணி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், நங்கநல்லுார், ஆலந்துார் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன் அடைவர்.

ஒரே நாளில் பரிசோதனை முடிவுகள் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை ஆரம்பித்தால், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை செல்வோர் எண்ணிக்கை குறையும்.ஆரம்ப சுகாதார மையங்களில், சர்க்கரை, ரத்த அழுத்தம், வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்படும். ரத்த அணுக்கள் கண்டறிதல், கல்லீரல், தைராய்டு உள்ளிட்ட பரிசோதனை செய்ய, அரசு பொது மருத்துவமனை செல்ல வேண்டும்.இதனால், பொதுமக்களுக்கு நேர விரயம், நோய் கண்டறிதல் தாமதம் போன்ற பிரச்னை உள்ளது.

இதற்கு தீர்வு காண, 2 கோடி ரூபாயில் ஒருங்கிணைந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. அரசு பொது மருத்துவமனையில் செய்யப்படும் பரிசோதனைகளை போல், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ரத்த மாதிரி எடுக்கப்படும். அவை, ஒருங்கிணைந்த ஆய்வகம் அனுப்பி, அன்றே முடிவுகள், சுகாதார நிலையங்களுக்கு மெயிலில் அனுப்பப்படும். பொதுமக்கள், மறுநாள் முடிவுகள் தெரிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X