வழிப்பறி திருடர்கள் 5 பேர்மீண்டும் சிறையிலடைப்பு

Added : செப் 07, 2022 | |
Advertisement
மயிலாப்பூர், திருந்தி வாழப்போவதாக கூறி, மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் ஐந்து பேருக்கு, ஜாமினில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.தி.நகர், காமராஜ் காலனியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்குமார், 21, சதீஷ், 29; கண்ணம்மாபேட்டையைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீஹரி, 20, கிஷோர், 20; மயிலாப்பூர், லுாதர்புரத்தைச் சேர்ந்தவர் சொட்டை பரத், 38.இவர்கள் ஐந்து பேரும், தொடர்ந்து பல்வேறு


மயிலாப்பூர், திருந்தி வாழப்போவதாக கூறி, மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள் ஐந்து பேருக்கு, ஜாமினில் வெளிவர முடியாதபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.தி.நகர், காமராஜ் காலனியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்குமார், 21, சதீஷ், 29; கண்ணம்மாபேட்டையைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீஹரி, 20, கிஷோர், 20; மயிலாப்பூர், லுாதர்புரத்தைச் சேர்ந்தவர் சொட்டை பரத், 38.இவர்கள் ஐந்து பேரும், தொடர்ந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த நிலையில், தி.நகர் துணை கமிஷனர் முன் ஆஜராகி, திருந்தி வாழப்போவதாகக் கூறி, நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரம் எழுதித் தந்தனர். ஆனால், மீண்டும் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால், மாம்பலம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.இதைத் தொடர்ந்து, ரமேஷ் குமாருக்கு 80 நாட்கள், சதீஷுக்கு 313 நாட்கள், ஸ்ரீஹரிக்கு 306 நாட்கள், கிஷோருக்கு 336 நாட்கள் பிணையில் வர முடியாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதற்கான உத்தரவை, துணை கமிஷனர் ஆதர்ஷ் பச்சேரா பிறப்பித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X