முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஆனைமலையை அடுத்துள்ள வேட்டைக்காரன்புதுார் ஓ.எஸ்.பி., நகரில் உள்ள லட்சுமி விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்ததுஇதற்காக கடந்த, 5ம் தேதி மாலை தீர்த்தம், முளைப்பாலிகை எடுத்தல், திருவிளக்கு வழிபாடு, ஆனைந்து வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, இறையாணை பெறுதல், ஐம்பூத வழிபாடு, திருமகள் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு,
முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் கோலாகலம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஆனைமலையை அடுத்துள்ள வேட்டைக்காரன்புதுார் ஓ.எஸ்.பி., நகரில் உள்ள லட்சுமி விநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது

இதற்காக கடந்த, 5ம் தேதி மாலை தீர்த்தம், முளைப்பாலிகை எடுத்தல், திருவிளக்கு வழிபாடு, ஆனைந்து வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, இறையாணை பெறுதல், ஐம்பூத வழிபாடு, திருமகள் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு, முதற்கால யாகம் நடந்தது.தொடர்ந்து, 6ம் தேதி காலை திருக்குறிப்பு மஞ்சனம், விமான கலசம், எந்திர தகடுகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் சாற்றப்பட்டது. இரண்டாம் கால வேள்வி நடந்தது. மாலை மூன்றாம் கால வேள்வி நடந்தது. நேற்று காலை நான்காம் கால வேள்வியை தொடர்ந்து, 6:00 மணிக்கு மேல் கும்பாபிேஷக விழா கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, மகா அபிேஷகம், தச தரிசனம், அலங்கார பூஜை, அன்னதானம் நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X