திருக்கழுக்குன்றம் காளியம்மன் தேரில் வீதியுலா12 ஆண்டுகளுக்கு பின்  கொண்டாட்டம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் காளியம்மன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று, தேர் உற்சவம் விமரிசையாக நடந்தது.திருக்கழுக்குன்றம், ருத்திரான் கோவில் பகுதியில், வட்டப்பாறையின் மேல் அமர்ந்த காளியம்மன் கோவில், கிராம கோவிலாக, பல நுாற்றாண்டுகளாக விளங்குகிறது.கோவிலில், இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, கிராம மக்கள் தேர் உற்சவம் நடத்துவர்.கடந்த 2009ல், தேர்
திருக்கழுக்குன்றம் காளியம்மன் தேரில் வீதியுலா12 ஆண்டுகளுக்கு பின்  கொண்டாட்டம்

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் காளியம்மன் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று, தேர் உற்சவம் விமரிசையாக நடந்தது.

திருக்கழுக்குன்றம், ருத்திரான் கோவில் பகுதியில், வட்டப்பாறையின் மேல் அமர்ந்த காளியம்மன் கோவில், கிராம கோவிலாக, பல நுாற்றாண்டுகளாக விளங்குகிறது.கோவிலில், இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, கிராம மக்கள் தேர் உற்சவம் நடத்துவர்.கடந்த 2009ல், தேர் உற்சவம் நடத்தப்பட்டு, பல காரணங்களால் தொடர்ந்து நடைபெறவில்லை.

கோவிலில் திருப்பணிகள் செய்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் முடித்து, பிற உற்சவங்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது. தேர் உற்சவம் மட்டும் துவக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மக்கள், இதை துவக்க முடிவெடுத்து, அதற்கான பணியில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் இரவு, அம்மன் தேரில் எழுந்தருளி, நள்ளிரவில் உலா புறப்பட்டு, மாட வீதிகளில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று மாலையும், தேர் உற்சவம் நடந்தது. பக்தர்கள், அம்மனை தரிசித்து வழிபட்டனர்.இன்று மாலை 3:00 மணிக்கு, பக்தர்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். இரவு தெருக்கூத்து நாடகம் நடக்கிறது.நாளை மதியம் 12:00 மணிக்கு, விடையாற்றி உற்சவம் நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு பின் நடந்த தேர் உற்சவத்தால், பக்தர்கள் மகிழ்ந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X