தி.மு.க., கவுன்சிலர் மீது ரூ.4 லட்சம் மோசடி புகார்| Dinamalar

தி.மு.க., கவுன்சிலர் மீது ரூ.4 லட்சம் மோசடி புகார்

Added : செப் 07, 2022 | |
வேலுார்:நான்கு லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, தி.மு.க., கவுன்சிலர் மீது, வியாபாரி புகார் கொடுத்துள்ளார்.வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரி காகிதப்பட்டரையை சேர்ந்தவர் கிருபாகரன், 35; துணி வியாபாரி. வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் அவர் நேற்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வேலுார் மாநகராட்சி, 27வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சதீஷ்குமார், 30; பங்குச்சந்தையில் முதலீடு

வேலுார்:நான்கு லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, தி.மு.க., கவுன்சிலர் மீது, வியாபாரி புகார் கொடுத்துள்ளார்.

வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரி காகிதப்பட்டரையை சேர்ந்தவர் கிருபாகரன், 35; துணி வியாபாரி. வேலுார் எஸ்.பி., அலுவலகத்தில் அவர் நேற்று கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: வேலுார் மாநகராட்சி, 27வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் சதீஷ்குமார், 30; பங்குச்சந்தையில் முதலீடு செய்யும், 'ஸ்டாக் கிங்ஸ்' என்ற நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.


கடந்தாண்டு பிப்., மாதம், நான்கு லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன்.மார்ச் முதல் ஜூன் வரை ஒரு லட்சம் ரூபாய்க்கு, 8,000 ரூபாய் வீதம் நான்கு லட்சம் ரூபாய்க்கு, 32 ஆயிரம் ரூபாய் என மாதந்தோறும் வட்டிப்பணம் தந்தார்.ஜூலை முதல் பங்கு சந்தை சரிந்ததாக காரணம் கூறி, வட்டிப்பணம் தரவில்லை.


அசல் பணத்தை கேட்டால், கொலை மிரட்டல் விடுக்கிறார். நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.சத்துவாச்சாரி போலீசார் விசாரிக்க சென்றபோது, சதீஷ்குமார் தலைமறைவானது தெரிந்தது. அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X