மோசமான சாலையால் பஸ் வசதி 'கட்'பொன்பதர்கூடம் மக்களுக்கு சிரமம்

Added : செப் 07, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:பள்ளம், மேடாக காணப்படும் சாலையில், தனியார் பேருந்து இயக்காததால், பொன்பதர்கூடம் மக்கள் சிரமப்படுகின்றனர்.திருக்கழுக்குன்றம் - பொன்விளைந்தகளத்துார் நெடுஞ்சாலையில், கார், பேருந்து உட்பட தினம் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இச்சாலையில், பொன்பதர்கூடம் கிராம பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 2 கி.மீ., தொலைவுக்கு ஆங்காங்கே, பள்ளம் மேடாக உள்ளது.இதனால்,
மோசமான சாலையால் பஸ் வசதி 'கட்'பொன்பதர்கூடம் மக்களுக்கு சிரமம்

செங்கல்பட்டு:பள்ளம், மேடாக காணப்படும் சாலையில், தனியார் பேருந்து இயக்காததால், பொன்பதர்கூடம் மக்கள் சிரமப்படுகின்றனர்.

திருக்கழுக்குன்றம் - பொன்விளைந்தகளத்துார் நெடுஞ்சாலையில், கார், பேருந்து உட்பட தினம் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இச்சாலையில், பொன்பதர்கூடம் கிராம பேருந்து நிறுத்தத்தில் இருந்து, 2 கி.மீ., தொலைவுக்கு ஆங்காங்கே, பள்ளம் மேடாக உள்ளது.இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி காயம்அடைகின்றனர்.

மேலும், இப்பகுதி யில் இயக்கப்படும் ஒரே ஒரு தனியார் பேருந்தும், சாலை முறையாக இல்லை என, அடிக்கடி நிறுத்தப்படுகிறது.இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளம், மேடாக காணப்படும் சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X