சிங்கம், புலி விற்க முயன்ற மாணவருக்கு 'காப்பு!'

Added : செப் 07, 2022 | |
Advertisement
வேலுார்:புலி, சிங்கக்குட்டிகளை விற்பதாக, 'ஆன்லைனில்' விளம்பரம் செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.வேலுாரில், '25 லட்சம் ரூபாய்க்கு புலிக்குட்டி அல்லது சிங்கக்குட்டி விற்பனை செய்யப்படும்; பணம் கொடுத்தால், 24 மணி நேரத்தில் 'டெலிவரி' செய்யப்படும்' என, படத்துடன் தகவல், சமூக வலைதளங்களில் வெளியானது.வேலுார் மாவட்ட வனத்துறையினர் ஆய்வு செய்ததில், திருவண்ணாமலை மாவட்டம்,
சிங்கம், புலி விற்க முயன்ற மாணவருக்கு 'காப்பு!'

வேலுார்:புலி, சிங்கக்குட்டிகளை விற்பதாக, 'ஆன்லைனில்' விளம்பரம் செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.
வேலுாரில், '25 லட்சம் ரூபாய்க்கு புலிக்குட்டி அல்லது சிங்கக்குட்டி விற்பனை செய்யப்படும்; பணம் கொடுத்தால், 24 மணி நேரத்தில் 'டெலிவரி' செய்யப்படும்' என, படத்துடன் தகவல், சமூக வலைதளங்களில் வெளியானது.வேலுார் மாவட்ட வனத்துறையினர் ஆய்வு செய்ததில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த பார்த்திபன், 24, என்பவர் இவ்வாறு விளம்பரம் செய்தது தெரிந்தது.
வேலுார், சார்ப்பனாமேட்டில் வசிக்கும் அவர், சித்துாரில் தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் அறிவியல் இரண்டாமாண்டு படிப்பதும் தெரிந்தது.வனத்துறையினர் அவரை மொபைலில் தொடர்பு கொண்டு, புலிக்குட்டி கேட்டனர். பணத்துடன் வீட்டுக்கு வருமாறு கூறவே, அங்கு சென்றனர்.அவர், '25 லட்சம் ரூபாய் கொடுத்தால், சென்னையில் வசிக்கும் நண்பர் வாயிலாக, ஒரு ஆண் புலிக்குட்டி அல்லது ஒரு பெண் சிங்கக்குட்டி வாங்கி தருகிறேன். அதற்கு உணவு, வளர்ப்பு பயிற்சியும் சொல்லித் தருகிறேன்' என்று கூறியுள்ளார்.
உடனடியாக அவரை வனத்துறையினர் கைது செய்தனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:பார்த்திபனும், அவரது நண்பரும் சேர்ந்து வன விலங்குகள், பறவைகள், பாம்பு போன்றவற்றை வனப்பகுதிகளில் பிடித்து, ஆன்லைனில் விளம்பரம் வெளியிட்டு விற்பனை செய்து வந்துள்ளனர்.
இதற்காக, வனப்பகுதியில் சம்பளத்துக்கு வேட்டைக்காரர்களை வைத்துள்ளனர்.பார்த்திபன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது நண்பர் தமிழ் என்பவரிடம் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு கூறினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X