நீட் தேர்வு முடிவு வெளியீடு: ராஜஸ்தான் மாணவி முதலிடம்!

Updated : செப் 08, 2022 | Added : செப் 08, 2022 | கருத்துகள் (15) | |
Advertisement
புதுடில்லி: மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள் வெளியானது. ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா, நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். 'டாப் 50' மாணவர்களில் 2 பேர் தமிழகத்திலிருந்து இடம் பிடித்துள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, மருத்துவ
NEETresult2022, NEET exam,NEET result,Medical Entrance Test,நீட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள் வெளியானது. ராஜஸ்தான் மாணவி தனிஷ்கா, நாட்டிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். 'டாப் 50' மாணவர்களில் 2 பேர் தமிழகத்திலிருந்து இடம் பிடித்துள்ளனர்.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு, ஜூலை 17ல், நாடு முழுதும், 3,500 மையங்களில் நடந்தது. இந்த தேர்வின் முடிவுகளை, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

நீட் தேர்வு எழுதிய மாணவர்களில், 9,93,069 பேர் (56.28 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 8,70,074 பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், தற்போது அதிக அளவிலான மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் நாட்டிலேயே முதலிடம் பிடித்து, ராஜஸ்தானை சேர்ந்த மாணவி தனிஷ்கா, சாதனை படைத்துள்ளார்.


latest tamil newsடில்லி மாணவர் ஆஷிஷ் பத்ரா வத்ஷா என்ற மாணவர் இரண்டாம் இடமும், கர்நாடகாவை சேர்ந்த ஹிரிஷிகேஷ் என்ற மாணவர் 3வது இடமும் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் 99.9997733 சதவீத மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இதே மதிப்பெண் எடுத்த கர்நாடகாவை சேர்ந்த ருச்சா பவாஷி என்ற மாணவிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.தமிழகத்திலிருந்து இருவர்


'டாப் 50'ல் 9 பேர் கர்நாடகாவையும், குஜராத், டில்லியிலிருந்து தலா 5 பேரும் இடம் பெற்றுள்ளனர். தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து தலா 4 பேரும், ராஜஸ்தான், மஹாராஷ்டிராவிலிருந்து தலா 3 பேரும், தமிழகம், ம.பி., ஹரியானாவிலிருந்து தலா 2 பேரும் 'டாப் 50'ல் இடம் பிடித்துள்ளனர். பஞ்சாப், ஜம்மு, கோவா, உ.பி., ஒடிசா, சட்டீஸ்கர், கேரளாவிலிருந்து தலா ஒருவர் இடம்பிடித்துள்ளனர். 'டாப் 50'ல் 16 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
08-செப்-202214:20:39 IST Report Abuse
theruvasagan அகில இந்திய அளவிலான தேர்ச்சிகளில் தமிழ்நாட்டின் கல்வித் திறன் தாழ்ந்து கிடக்கிறதேன்னு சமூக அநீதிக்காரன் எவனும் கவலைப்பட மாட்டான்.
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
08-செப்-202213:28:35 IST Report Abuse
Barakat Ali நீட் எதிர்ப்பில் திமுகவுடன் இணைந்து குரல் கொடுக்கும் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலமான இதே ராஜஸ்தானில் மாணவி நீட் தேர்வில் முதலிடம் ..... .
Rate this:
Cancel
08-செப்-202211:16:42 IST Report Abuse
ஆரூர் ரங் தமிழக தேர்ச்சி 51 சதவீதம். மொத்தம் 67787 தேர்வாகி உள்ளனர். இதில் பத்தில் ஒருவருக்கு மட்டுமே MBBS இடம்🤫 கிடைக்க வாய்ப்புள்ளது. டாப் 50 ரேங்க் கில் இருவர் மட்டுமே தமிழ்நாட்டு மாணவர். சமச்சீர் ஒழிக்கப் பட்டால் இன்னும் பலர் உயர் மதிப்பெண் பெறுவர். ராஜஸ்தானை விட நாம் மிகவும் பின்தங்கியுள்ளது ஏன்? பானிபூரி, பீடா என அவர்களைக் கிண்டலடிக்கும் வேலையை உ.பி ஸ் நிறுத்தட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X