எலும்புக்கூடான மின் கம்பம்:அதிகாரிகள் மாற்றுவரா?

Added : செப் 08, 2022 | |
Advertisement
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில், வெண்பாக்கம் செல்லும் சாலை ஓரத்தில் மின் கம்பம்உள்ளது.இந்த கம்பம் சேதமடைந்து, எலும்புக்கூடாக, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.பழனி, சிங்கப்பெருமாள் கோவில்.பயணியர் நிழற்குடை பராமரிக்க கோரிக்கைமதுராந்தகம் -
எலும்புக்கூடான மின் கம்பம்:அதிகாரிகள் மாற்றுவரா?

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில், வெண்பாக்கம் செல்லும் சாலை ஓரத்தில் மின் கம்பம்உள்ளது.இந்த கம்பம் சேதமடைந்து, எலும்புக்கூடாக, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த மின் கம்பத்தை மாற்ற, மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எம்.பழனி, சிங்கப்பெருமாள் கோவில்.

பயணியர் நிழற்குடை பராமரிக்க கோரிக்கை

மதுராந்தகம் - -கூவத்துார் சாலை, பவுஞ்சூர் அருகே, ஆக்கினாம்பட்டு கிராமத்தில், பேருந்து நிறுத்தம் உள்ளது.இங்குள்ள பயணியர் நிழற்குடை, பராமரிப்பு இல்லாமல் மோசமாகி உள்ளது. சமீபத்தில் பெய்த மழை நீர், நிழற்குடையினுள் தேங்கி நிற்கிறது. தவிர, 'போஸ்டர்' ஒட்டப்பட்டு அலங்கோலமாக இருக்கிறது.இதனால், மழை மற்றும் வெயிலில் நின்று, பயணியர் சிரமப்படுகின்றனர். நிழற்குடையை பராமரித்து தர, ஒன்றிய நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- நா.சுப்ரமணி, ஆக்கிராம்பட்டு, பவுஞ்சூர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X