பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

Added : செப் 08, 2022 | |
Advertisement
செங்கல்பட்டு:நெல்வாய் கிராமத்தில், புதிதாக கட்டப்பட்ட பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.மதுராந்தகம் ஒன்றியம், நெல்வாய் கிராமத்தில், நுாற்றாண்டுகள் பழமையான, சக்தி பொன்னியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் சிறிதாக இருந்ததால், அதை அகற்றி கிராம மக்கள் பங்களிப்புடன், பெரிய கோவில் கட்டும் பணிகள்
பொன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

செங்கல்பட்டு:நெல்வாய் கிராமத்தில், புதிதாக கட்டப்பட்ட பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசனம் செய்தனர்.

மதுராந்தகம் ஒன்றியம், நெல்வாய் கிராமத்தில், நுாற்றாண்டுகள் பழமையான, சக்தி பொன்னியம்மன் கோவில் உள்ளது.இக்கோவில் சிறிதாக இருந்ததால், அதை அகற்றி கிராம மக்கள் பங்களிப்புடன், பெரிய கோவில் கட்டும் பணிகள் நடந்தன.கோவிலுக்குள் விநாயகர், முருகர், வள்ளி பாலசுப்பிரமணியர், நவக்கிரகம் உள்ளிட்ட கடவுளர்கள், புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.

விழாவையொட்டி, மூன்று நாட்களாக, விக்னேஷ்வர பூஜை, கோ பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்டவை நடந்தன.கும்பாபிஷேக நாளான நேற்று காலை 8:30 மணிக்கு, யாகசாலையில் இருந்து புறப்பட்ட கலசம், கோவிலை சுற்றி வந்து, 8:50 மணிக்கு, பொன்னியம்மன் கோவில் மூலவர் விமான கோபுரத்தில், புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.இதில், நெல்வாய் கிராமத்தை சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X