வாழைக்காய்ஏலம்; விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : செப் 08, 2022 | |
Advertisement
அவிநாசி : 'சேவூர் அல்லது அவிநாசியில், வாழைக்காய் மண்டி அமைக்க வேண்டும்,' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.அவிநாசி அருகே வேட்டுவபாளையம் ஊராட்சி பகுதியில் செயல்படும், உழவர் உற்பத்தியாளர் குழுவினரை, கலெக்டர் வினீத் சந்தித்து, அவர்களின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.உற்பத்தியாளர் குழுவிற்காக பெறும் கடன் தொகையை எதற்காக செலவிடுகிறீர்கள், என்பது உட்பட பல்வேறு

அவிநாசி : 'சேவூர் அல்லது அவிநாசியில், வாழைக்காய் மண்டி அமைக்க வேண்டும்,' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

அவிநாசி அருகே வேட்டுவபாளையம் ஊராட்சி பகுதியில் செயல்படும், உழவர் உற்பத்தியாளர் குழுவினரை, கலெக்டர் வினீத் சந்தித்து, அவர்களின் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.உற்பத்தியாளர் குழுவிற்காக பெறும் கடன் தொகையை எதற்காக செலவிடுகிறீர்கள், என்பது உட்பட பல்வேறு விஷயங்களை கேட்டறிந்த கலெக்டர், 'புதிய விஷயங்களை முயற்சி செய்யுங்கள்,' என, அறிவுரை கூறினார்.

பின், உழவர் உற்பத்தியாளர் குழுவினர் மூலம் வாங்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வரும் விவசாய உபகரணம் செயல்படும் விதத்தை பார்வையிட்டார்.உற்பத்தியாளர் குழுவினர் கூறுகையில், 'இப்பகுதியில் வாழை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் அதிகளவில் உள்ளனர்.சேவூரில், பல ஆண்டுகளுக்கு முன், வாழைக்காய் ஏல மையம் அமைக்கப்பட்டிருந்தது; நிர்வாக குளறுபடியால் மூடப்பட்டது.எனவே, சேவூர் அல்லது அவிநாசியில் வாழைக்காய் ஏல மையம் அமைக்க வேண்டும், என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X