சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது 'போக்சோ'

Added : செப் 08, 2022 | |
Advertisement
ஆலாந்துறை : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 16 வயது சிறுமியுடன் பழகி கர்ப்பமாக்கி, திருமணம் செய்து கொண்ட வாலிபரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.செம்மேட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர், 20; கூலி தொழிலாளி. இவர், ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனது உறவினரான, 16 சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகி, சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார். மூன்று

ஆலாந்துறை : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 16 வயது சிறுமியுடன் பழகி கர்ப்பமாக்கி, திருமணம் செய்து கொண்ட வாலிபரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

செம்மேட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர், 20; கூலி தொழிலாளி. இவர், ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனது உறவினரான, 16 சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி பழகி, சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார். மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக சிறுமி, ஸ்ரீதரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, கடந்த, 1ம் தேதி ஸ்ரீதர் 16 வயது சிறுமியை, கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமி, ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த ஆலாந்துறை போலீசார், ஸ்ரீதரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X