மீன் பிடி தொழிலில்நரிக்குறவர்கள் ஆர்வம்

Added : செப் 08, 2022 | |
Advertisement
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஏரியில் மீன்கள் பிடிப்பதில் நரிக்குறவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்று உத்திரமேரூர் ஏரி. இரண்டு ஆண்டுகளாக, பருவ மழைக்கு தொடர்ந்து நிரம்பி வரும் இந்த ஏரியில், விரால், குறவை, கெண்டை, திலேப்பி, கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் அதிகம் உள்ளன.இந்த ஆண்டு கோடைக்காலத்தில் ஏரியில் நீர் வற்றாததால், வலைகள் மூலம்
மீன் பிடி தொழிலில்நரிக்குறவர்கள் ஆர்வம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஏரியில் மீன்கள் பிடிப்பதில் நரிக்குறவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய ஏரிகளில் ஒன்று உத்திரமேரூர் ஏரி. இரண்டு ஆண்டுகளாக, பருவ மழைக்கு தொடர்ந்து நிரம்பி வரும் இந்த ஏரியில், விரால், குறவை, கெண்டை, திலேப்பி, கெளுத்தி உள்ளிட்ட மீன்கள் அதிகம் உள்ளன.இந்த ஆண்டு கோடைக்காலத்தில் ஏரியில் நீர் வற்றாததால், வலைகள் மூலம் மீன்களை முழுமையாக பிடிக்காத நிலை ஏற்பட்டது.

அதை தொடர்ந்து, தற்போது தென் மேற்கு பருவ மழை காரணமாக ஏரியில் அதிக அளவு நீர் இருப்பு உள்ளது. ஏரி தண்ணீரில் துள்ளி குதிக்கும் மீன்களை பலரும் துாண்டில் மூலம் பிடித்து வருகின்றனர். உத்திரமேரூரில் உள்ள நரிக்குறவர்கள், துாண்டில் போட்டு மீன்கள் பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திலேப்பி மீன்கள் மற்றும் கெண்டை மீன்கள் அதிகம் கிடைக்கும் நிலையில், அவற்றை கிலோ 100 ரூபாய்க்கு, உத்திரமேரூர் சாலையோரம் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். மீன்பிடித் தொழில் மூலம் வருமானம் காண்பதால், நரிக்குறவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X