சாயப்பட்டறை கழிவு நீர்வேகவதி ஆற்றில் கலப்பதாக புகார்

Added : செப் 08, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் சாயப்பட்டறை கழிவு நீர் கலப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும், ரசாயன கழிவு நீர் திறந்து விடுவதால், ஆறு மாசு அடைந்து, கால்நடைகள் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.காஞ்சிபுரம் நகர் பகுதி வழியாக செல்லும் வேகவதி ஆற்றில் மழை காலத்தை தவிர, மற்ற நாட்களில் கழிவு நீர் தான் செல்கிறது.மேலும் சாயப்பட்டறை ரசாயன
சாயப்பட்டறை கழிவு நீர்வேகவதி ஆற்றில் கலப்பதாக புகார்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் சாயப்பட்டறை கழிவு நீர் கலப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தும், ரசாயன கழிவு நீர் திறந்து விடுவதால், ஆறு மாசு அடைந்து, கால்நடைகள் பாதிக்கப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் நகர் பகுதி வழியாக செல்லும் வேகவதி ஆற்றில் மழை காலத்தை தவிர, மற்ற நாட்களில் கழிவு நீர் தான் செல்கிறது.மேலும் சாயப்பட்டறை ரசாயன கழிவு நீர் வேகவதி ஆற்றில் கலப்பதால், ஆறு மாசு அடைகிறது. இதை தடுக்க முடியவில்லை.ரசாயன கழிவு நீர் ஆற்றில் விடக்கூடாது என ஏற்கனவே பொதுப்பணித் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்தன.

ஆற்றில் தண்ணீர் செல்லும் போது அதனுடன் சாய கழிவு நீரையும் திறந்து விடுவர். அப்போது கண்டுபிடிக்க முடியாது. மழை இல்லாத போது சாயப்பட்டறை கழிவு நீர் ஆற்றில் திறந்து விட்டால், நுரை படிந்து காணப்படுவது தெரிந்து விடும்.தாட்டித்தோப்பு பகுதியில் உள்ள வேகவதி ஆற்றில் செல்லும் தண்ணீர் நுரையுடன் செல்வதால் கழிவு நீர் கலப்பது தெரிகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:வீட்டு கழிவு நீர் ஆற்றில் சென்றால் நுரை ஏற்படாது. சாய கழிவு நீர் கலந்த சென்றால் இவ்வாறு நுரை ஏற்படும். மேலும் சாய கழிவு நீர் ஆற்றில் விடுவதால் மேயும் ஆடு, மாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

ஆற்றின் ஓரம் உள்ள குடியிருப்பு வாசிகள் பயன்படுத்தும் ஆழ்துளை கிணற்று நீர் பாதிப்படைந்து குளிக்க முடியாது. இப்படி பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.சம்பந்தப்பட்ட அதிகாரி கள் சாய கழிவு நீர் ஆற்றில் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X