கடந்தாண்டு 75 வழக்குகளில் 'போக்சோ'; மேற்கு மண்டல ஐ.ஜி., தகவல்

Added : செப் 08, 2022 | |
Advertisement
கோவை : ''மேற்கு மண்டலத்தில் கடந்தாண்டில் மட்டும், 75 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டு உள்ளது,'' என, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தெரிவித்தார்.பள்ளி மாணவிகளிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்தி, அச்சத்தை போக்கும் வகையில் மாவட்ட போலீசாருடன், பள்ளி மாணவிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதற்காக, கோவை மாவட்டம் கோவில்பாளையம்
கடந்தாண்டு 75 வழக்குகளில் 'போக்சோ'; மேற்கு மண்டல ஐ.ஜி., தகவல்

கோவை : ''மேற்கு மண்டலத்தில் கடந்தாண்டில் மட்டும், 75 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டு உள்ளது,'' என, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தெரிவித்தார்.

பள்ளி மாணவிகளிடையே தன்னம்பிக்கை ஏற்படுத்தி, அச்சத்தை போக்கும் வகையில் மாவட்ட போலீசாருடன், பள்ளி மாணவிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதற்காக, கோவை மாவட்டம் கோவில்பாளையம் அரசு பள்ளியில் படிக்கும், 30க்கும் மேற்பட்ட மாணவிகள், அவிநாசி ரோட்டில் உள்ள பி.ஆர்.எஸ்., மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.தொடர்ந்து, ஆயுதப்படை வளாகத்தில் போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகள், கண்ணீர் புகை குண்டு, பாதுகாப்பு உபகரணங்களை மாணவிகள் பார்வையிட்டனர்.

பிறகு, ஆயுதங்களை எப்படி பயன்படுத்துவது, எந்த சூழ்நிலையில் ஆயுதங்களை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு தகவல்களை, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் மாணவிகளுக்கு விளக்கினார்.இதுமட்டுமின்றி, ரைபிள் கிளப்பிற்கு மாணவிகளை அழைத்துச் சென்று, துப்பாக்கி சுடுவது, துப்பாக்கிக்கு பயன்படுத்தும் உபகரணங்கள் பற்றி கற்றுக்கொடுத்தார். மாணவிகளும் ஆர்வத்துடன் பங்கேற்று, பல்வேறு தகவல்களை கேட்டறிந்தனர்.இந்நிகழ்ச்சியில், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், டி.ஐ.ஜி., முத்துச்சாமி, மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணன், போலீசார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கோவையில் 'புரொஜக்ட் பள்ளிக்கூடம்' திட்டத்தின் வாயிலாக 600 பள்ளிகளை சேர்ந்த 95 ஆயிரம் மாணவ - மாணவிகளுக்கு போக்சோ, பாலியல், போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கு மண்டலத்தில் கடந்தாண்டில் மட்டும், 75 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, தண்டனை பெற்றுத் தரப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் கடந்த ஆகஸ்டு வரை, 91 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டு உள்ளது.

-சுதாகர்ஐ.ஜி.,மேற்கு மண்டலம்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X