வரும், 30ம் தேதி வரை மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம்| Dinamalar

வரும், 30ம் தேதி வரை மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம்

Added : செப் 08, 2022 | |
கோவை : வரும், 30ம் தேதி வரை மட்டுமே, 'பூஸ்டர்' டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தாலும், இன்னும் முழுமையாக நீங்கவில்லை. கோவை மாவட்டத்தில் இதுவரை, 29 லட்சத்து, 12 ஆயிரத்து, 580 பேருக்கு முதல் தவணை, 26 லட்சத்து, 70 ஆயிரத்து, 84 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.18 வயதுக்கு

கோவை : வரும், 30ம் தேதி வரை மட்டுமே, 'பூஸ்டர்' டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்தாலும், இன்னும் முழுமையாக நீங்கவில்லை. கோவை மாவட்டத்தில் இதுவரை, 29 லட்சத்து, 12 ஆயிரத்து, 580 பேருக்கு முதல் தவணை, 26 லட்சத்து, 70 ஆயிரத்து, 84 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.



18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. 2 லட்சத்து, 40 ஆயிரத்து, 107 பேருக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டிருக்கிறது.18 முதல், 59 வயதினருக்கு, 30ம் தேதி வரை மட்டுமே தினந்தோறும் மற்றும் முகாம்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



அதனால், 11ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை மாவட்டத்தில், 1,530 இடங்களில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.கிராமப்புறங்களில் 1,081, மாநகராட்சியில், 340, நகராட்சிகளில், 109 முகாம்கள் நடத்தப்படும். முதல் மற்றும் இரண்டாவது தவணை, பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X