வேரூன்றிய பசுமை ஆர்வம்!

Added : செப் 08, 2022 | |
Advertisement
திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், காங்கயம் அருகே நேற்று 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.நான் விடும் மூச்சுக்காற்றில் வாழும் மனிதா... என்னை அழிப்பது, உன்னை நீயே வதைப்பதற்கு சமம் என்று, யதார்த்த உண்மையை, மவுனமாய் சொல்லிக்கொண்டுதான் மடிகிறது வெட்டப்படும் ஒவ்வொரு மரமும். ஆம்... விலைமதிப்பற்ற ஆக்சிஜனை இலவசமாக அளிக்கும் ஒவ்வொரு மரமும், மனித
வேரூன்றிய பசுமை ஆர்வம்!

திருப்பூர் : 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின் கீழ், காங்கயம் அருகே நேற்று 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நான் விடும் மூச்சுக்காற்றில் வாழும் மனிதா... என்னை அழிப்பது, உன்னை நீயே வதைப்பதற்கு சமம் என்று, யதார்த்த உண்மையை, மவுனமாய் சொல்லிக்கொண்டுதான் மடிகிறது வெட்டப்படும் ஒவ்வொரு மரமும். ஆம்... விலைமதிப்பற்ற ஆக்சிஜனை இலவசமாக அளிக்கும் ஒவ்வொரு மரமும், மனித குலத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்.

இதை உணர்ந்துதான், வெற்றி அமைப்பு, ஒட்டுமொத்த திருப்பூரையும் வனமாக மாற்றும் லட்சியத்துடன், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தை செயல்படுத்திவருகிறது. எட்டு ஆண்டுகாலமாக தொடரும் இந்த பசுமை பயணம், மக்கள் மத்தியில் மரம்நடும் ஆர்வத்தை ஆழமாக வேரூன்றச் செய்துள்ளது. ஒவ்வொருவரும் தங்களுக்கு சொந்தமான காலி இடங்களில், வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு, பாதுகாத்து வளர்த்துவருகின்றனர்.

காங்கயம் அருகே பொன்னாங்காளி வலசு மணியகாரர் தோட்டத்தில், நேற்று மரம் நடும் விழா நடந்தது. பிரபுராம்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில், 920 செம்மரம்; 920 சந்தனம்; 100 கருமருது; 100 வேங்கை என, மொத்தம் 2,040 மரக்கன்றுகள் நடப்பட்டன. எதிர்கால தலைமுறைக்கு பசுமையை பரிசளிக்கும் வகையில், குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்று, மரக்கன்றுகளை நடவு செய்தனர்.வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் மரம் நட விரும்புவோர், 90470 86666 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X