வியாபாரியாக மாறிய விவசாயி குடும்பத்தினர்; 'காலிபிளவர்' விற்பனை செய்ய கடை விரித்தனர்

Added : செப் 08, 2022 | |
Advertisement
திருப்பூர் : 'திருப்பூர் அருகே காலிபிளவர் அறுவடை பணிக்கு வேலையாட்கள் கிடைப்பதில்லை,' என்று விவசாயி குடும்பத்தினர் புலம்புகின்றனர்.திருப்பூரை அடுத்த கொடுவாய், பொங்கலுார், அவிநாசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் காலி பிளவர் சாகுபடி செய்தனர். அவற்றை அறுவடை செய்து, சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஒரு பூ 30 முதல் 40 ரூபாய் வரைக்கு விற்பனையாகி
வியாபாரியாக மாறிய விவசாயி குடும்பத்தினர்; 'காலிபிளவர்' விற்பனை செய்ய கடை விரித்தனர்

திருப்பூர் : 'திருப்பூர் அருகே காலிபிளவர் அறுவடை பணிக்கு வேலையாட்கள் கிடைப்பதில்லை,' என்று விவசாயி குடும்பத்தினர் புலம்புகின்றனர்.

திருப்பூரை அடுத்த கொடுவாய், பொங்கலுார், அவிநாசிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் காலி பிளவர் சாகுபடி செய்தனர். அவற்றை அறுவடை செய்து, சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். ஒரு பூ 30 முதல் 40 ரூபாய் வரைக்கு விற்பனையாகி வருகிறது.

அவ்வகையில், தாராபுரம் ரோடு, வேலம்பட்டி 'டோல் கேட்' அருகே விவசாயி மோகன்ராஜ் குடும்பத்தினர், காலிபிளவர் சாகுபடி செய்துள்ளனர். அறுவடை பணிக்கு வேலையாட்கள் சரியாக கிடைக்காத காரணத்தாலும், சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் செலவு அதிகரித்த காரணத்தால், தோட்டத்தில் பறித்து ரோட்டோரம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, மோகன்ராஜ் கூறியதாவது: நாற்றாங்காலில் ஒரு மாதம், வயலில், மூன்று மாதம் என, நான்கு மாதங்கள் இதற்காக வேலை செய்ய முடிகிறது. ஏக்கருக்கு, 30 முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. புழு தாக்குதலில் இருந்து காப்பாற்ற, இரு நாட்களுக்கு ஒரு முறை, முறையாக கண்காணித்து, பூச்சி மருந்து தெளிக்க வேண்டியுள்ளது.பூக்கள் மலர்ந்த பின், அதை பறித்து சந்தைக்கு கொண்டு விற்பனை செய்ய முடிவதில்லை.

முதலில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் எளிதாக கிடைத்தனர். தற்போது நுாறு நாள் பணிக்கு செல்வதால், யாரும் வருவதில்லை. அப்படியே வந்தாலும், கேட்கும் சம்பளம் கொடுக்க முடிவதில்லை.அதனால், வாகனங்களில் எடுத்து சென்று சந்தையில் விற்பனை செய்யும் போது, கையில் உள்ள பணத்தை செலவு செய்ய வேண்டியுள்ளது.

தற்போது மாலை, இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் நெருக்கடியான சூழல் உள் ளது. விதை, உரம், கூலி உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ளதால், யாரையும் எதிர்பார்க்காமல், எங்கள் குடும்பத்தினரே தோட்டத்தில் இறங்கி, காலி பிளவரை பறித்து, சந்தைக்கு கொண்டு செல்லாமல், ரோட்டோரம் வைத்து விற்பனை செய்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

முதலில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் எளிதாக கிடைத்தனர். தற்போது நுாறு நாள் பணிக்கு செல்வதால், யாரும் வருவதில்லை. அப்படியே வந்தாலும், கேட்கும் சம்பளம் கொடுக்க முடிவதில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X