ராகுலை வரவேற்று பேனர்: வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

Added : செப் 08, 2022 | |
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், காங்., ராகுலை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் சாலையில் சாய்ந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.காங்., ராகுல், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ., யாத்திரையை நேற்று மாலை துவங்கினார்.இதற்கு முன்னதாக, நேற்று காலை, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள முன்னாள் பிரதமரும், தன் தந்தையுமான ராஜிவ் நினைவகத்திற்கு
ராகுலை வரவேற்று பேனர்: வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில், காங்., ராகுலை வரவேற்று வைக்கப்பட்ட பேனர்கள் சாலையில் சாய்ந்ததால், வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டது.

காங்., ராகுல், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ., யாத்திரையை நேற்று மாலை துவங்கினார்.இதற்கு முன்னதாக, நேற்று காலை, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள முன்னாள் பிரதமரும், தன் தந்தையுமான ராஜிவ் நினைவகத்திற்கு வந்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

ராகுலை வரவேற்ற கட்சியினர், சென்னை- - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ராஜிவ் நினைவகம் வெளியே 100க்கும் மேற்பட்ட பேனர்களை வைத்தனர்.சரியான பிடிமானம் இல்லாததால், சாலையோரம் பேனர்கள் சாய்ந்தன. இதனால், தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்ல இடையூறு ஏற்பட்டது.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கடந்த 2019ல் சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற பெண், பள்ளிக்கரணை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில், லாரி மோதி அதே இடத்திலேயே இறந்தார். இது, தமிழகம் முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பொது இடங்களில் டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு, உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டன.ஆரம்பத்தில் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், சில மாதங்களாக பேனர் வைக்கும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் தேசிய நெடுஞ்சாலையோரம், 100க்கும் மேற்பட்ட பேனர்களை, அனுமதியின்றி காங்., கட்சியினர் நேற்று வைத்தனர்.இவை சாலையில் விழுந்து, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருந்தன. நெடுஞ்சாலையில் பேனர் வைப்போர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X