சுதந்திர தின வெள்ளி விழா; நினைவு தூண் பொலிவு

Added : செப் 08, 2022 | |
Advertisement
அவிநாசி : அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சிதிலமடைந்திருந்த சுதந்திர தின வெள்ளி விழா நினைவுத்துாண், 'தினமலர்' செய்தி எதிரொலியால் பராமரிக்கப்பட்டது.அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சுதந்திர தின, 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்தியாகம் செய்தோரின் நினைவாக,
சுதந்திர தின வெள்ளி விழா; நினைவு தூண் பொலிவு

அவிநாசி : அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சிதிலமடைந்திருந்த சுதந்திர தின வெள்ளி விழா நினைவுத்துாண், 'தினமலர்' செய்தி எதிரொலியால் பராமரிக்கப்பட்டது.

அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சுதந்திர தின, 25ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, நாட்டின் விடுதலைக்காக போராடி உயிர்தியாகம் செய்தோரின் நினைவாக, நினைவு துாண் நிறுவப்பட்டுள்ளது.சுதந்திர தின பவள விழா கொண்டாடப்படும் இத்தருணத்தில், நினைவு தூணை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சுற்றுச்சுவர் சேதமடைந்து, உடைந்தது.

இதனை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுத்துறையினர், அரசியல் கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் என, எவருக்கும் வரவில்லை என்பதை சுட்டிக்காட்டி, கடந்த, 3ம் தேதி 'தினமலர்' நாளிதழில், செய்தி பிரசுரமானது.இதன் எதிரொலியாக, 'அறிவுச்சுடர்' அறக்கட்டளை நிறுவன தலைவர் முத்துகுமரன் ஏற்பாட்டில், நினைவுத்துாண் பராமரிக்கப்பட்டது.

இது குறித்து, அவர் கூறுகையில், 'தினமலர் நாளிதழில் வந்த செய்தியின் விளைவாக, சி.இ.ஓ., அறிவுரையின் அடிப்படையில், வெள்ளி விழா சுதந்திர தின நினைவுத்துாண் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், பராமரிப்பு பணி செய்துள்ளோம்,' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X