ராமநாதபுரத்தில் நடந்த கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள்

Added : செப் 08, 2022 | |
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் முன்விரோதத்தில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.க்ஷராமநாதபுரம் தங்கமணி மகன் சிலம்பரசன் 24 மற்றும் நண்பர்கள் ஐயப்பன் கோயில் அருகே உள்ள பாலத்தில் மது அருந்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் மகன் சக்திவேல் 24, அங்கு வந்தார். சக்திவேலுக்கும்,
ராமநாதபுரத்தில் நடந்த கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள்

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் முன்விரோதத்தில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.க்ஷ
ராமநாதபுரம் தங்கமணி மகன் சிலம்பரசன் 24 மற்றும் நண்பர்கள் ஐயப்பன் கோயில் அருகே உள்ள பாலத்தில் மது அருந்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த காளிதாஸ் மகன் சக்திவேல் 24, அங்கு வந்தார். சக்திவேலுக்கும், சிலம்பரசனுக்கும் இடையே விநாயகர் சதுர்த்தி விழாவில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
சக்திவேலை சிலம்பரசன் தாக்கினார்.இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், அவரது தம்பி வாசுதேவன், சிவராமன் மகன் விக்னேஷ்வரன் 20, மாரிமுத்து மகன் பாலமுருகன் 20, ஆகியோருடன் சென்று சிலம்பரசன் மற்றும் நண்பர்களை தாக்கினர்.சக்திவேல் உளியால் குத்தியதில் சிலம்பரசன் பலியானார். ச
க்திவேல் உள்ளிட்ட 4 பேரையும் ராமநாதபுரம் பஜார் போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. சக்திவேலுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5000 அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும், வாசுதேவனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.சீனிவாசன் தீர்ப்பளித்தார்.
மற்ற இருவரும் விடுவிக்கப்பட்டனர். அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோகரன் ஆஜரானார்.சக்திவேல் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். வாசுதேவன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X