பூமி பூஜை போட்டாச்சு...பணி துவங்கவோ நாளாச்சு!

Added : செப் 08, 2022 | |
Advertisement
கால்வாய் அடைப்புதிருப்பூர் குறிஞ்சிநகர், ெஷரீப் காலனி, ஸ்ரீ லட்சுமி அப்பார்மென்ட் பகுதியில் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளது. கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் நிற்பதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- காளீஸ்வரன், குறிஞ்சி நகர்.குப்பை அள்ளவில்லைதிருப்பூர், பூலுவபட்டியில் இருந்து அண்ணாநகர் செல்லும் வழியில் குப்பை தொட்டி எப்போதும் நிறைந்து காணப்படுகிறது.
பூமி பூஜை போட்டாச்சு...பணி துவங்கவோ நாளாச்சு!



கால்வாய் அடைப்பு

திருப்பூர் குறிஞ்சிநகர், ெஷரீப் காலனி, ஸ்ரீ லட்சுமி அப்பார்மென்ட் பகுதியில் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கியுள்ளது. கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் நிற்பதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- காளீஸ்வரன், குறிஞ்சி நகர்.

குப்பை அள்ளவில்லை

திருப்பூர், பூலுவபட்டியில் இருந்து அண்ணாநகர் செல்லும் வழியில் குப்பை தொட்டி எப்போதும் நிறைந்து காணப்படுகிறது. மாநகராட்சி ஊழியர்கள் குப்பை அகற்றுவதில் அலட்சியம் காட்டுகின்றனர்.-ரவிகிருஷ்ணன், பூலுவபட்டி.

தடுமாற வைக்குது

திருப்பூர், 41வது வார்டு, கே.வி.ஆர்., நகர் - கே.டி.சி., ஸ்கூல் வீதியில் சாலை குண்டும் குழியாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்; குழியை மூட வேண்டும்.-செல்வராஜ், கே.வி.ஆர்., நகர்.

குழியா? சாலையா?

திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து பி.என்., ரோட்டுக்கு வர பஸ்கள் தடுமாறுகின்றன. இணைப்பு சாலை குழியாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும்.-ரங்கநாதன், பி.என்., ரோடு.

தண்ணீருக்கு தவிப்பு

திருப்பூர், 46வது வார்டு, யாசின்பாபு நகர் முதல் வீதி, மஸ்ஜித் தெரு முதல் மூன்று வீதியில் மூன்று மாதங்களாக தண்ணீர் வினியோகமில்லை.-சையத்சலாவுதீன், யாசின்பாபு நகர்.

அறிவிப்பு இல்லை

திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி - பொம்மநாயக்கன்பாளையம் வழித்தடத்தில், பாதாள சாக்கடைக்கு குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. 200 மீ., முன் அறிவிப்பு பலகை வைக்காததால், பள்ளி முன்புறம் வந்து வாகன ஓட்டிகள் திரும்பிச் செல்கின்றனர்.- மாதேஸ்வரன்,பாப்பநாயக்கன்பாளையம்.

பணி மந்தம்

திருப்பூர், 41வது வார்டு, முருகம்பாளையம், பெரியார் நகரில் கழிப்பிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. ஒரு மாதமாகி விட்டது. அடுத்த கட்ட பணிகள் துவங்கவில்லை.-- சுந்தர், முருகம்பாளையம்.

விளக்கு எரிவதில்லை

திருப்பூர் தமிழ்நாடு தியேட்டர் எதிர்புற வீதி கருப்ப கவுண்டம் பாளையம் ரோட்டில் தெருவிளக்கு எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது. புதிய விளக்கு பொருத்த வேண்டும்.- ரவிக்குமார், பல்லடம் ரோடு.

சேறும், சகதியுமாய்...

திருப்பூர் வடக்கு, பெருமாநல்லுார் ஊராட்சி, கற்பகாம்பாள் நகரில் பத்து ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. பலமுறை மனு கொடுத்து சாலை அமைக்கவில்லை. மழை பெய்யும் போதெல்லாம் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது.-குமார், கற்பகாம்பாள் நகர்.

குப்பையால் கேடு

திருப்பூர், 12 வது வார்டு, கரியகாளியம்மன் கோவில் மண்டப வீதி, ஏ.வி.பி., ஜே.எஸ்.,கார்டன், மகாலட்சுமிநகர், அமர்ஜோதிகார்டன் பகுதியில் குப்பைகள் வாரக்கணக்கில் தேங்கியுள்ளது. குப்பை சரிவர அள்ளிச்செல்வதில்லை.- தெய்வராஜ், 15 வேலம்பாளையம்.

வீணாகும் தண்ணீர்

திருப்பூர், 40வது வார்டு, இடுவம்பாளையம், ஐயப்பன் கோவில் அருகில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்து, தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும்.-வாசுதேவன் தங்கவேல்,இடுவம்பாளையம்.

ஆபத்து இல்லை

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளிக்கு இயக்கப்படும் (டி.என்., 33 என் 2958) 8ம் நம்பர் அரசு பஸ்சில் கம்பிகள் நீட்டிய படி கால்களில் குத்தும் வகையில் இருந்தது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின் சரிசெய்யப்பட்டது. நன்றி.- சாந்தி, திருப்பூர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X