ரன்பீர் -- ஆலியாவுக்கு எதிராக பஜ்ரங்தள தொண்டர்கள் போராட்டம்

Added : செப் 08, 2022 | |
Advertisement
போபால் :பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு எதிராக பஜ்ரங்தள தொண்டர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, அவரும், அவரது மனைவி ஆலியா பட்டும், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினில் உள்ள மஹாகாலேஷ்வர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யாமல் திரும்பிச் சென்றனர்.பாலிவுட்டில் புகழ்பெற்ற ராஜ்கபூர் குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர், 39, சமீபத்தில் நடிகை ஆலியா
ரன்பீர் -- ஆலியாவுக்கு எதிராக   பஜ்ரங்தள தொண்டர்கள் போராட்டம்

போபால் :பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு எதிராக பஜ்ரங்தள தொண்டர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து, அவரும், அவரது மனைவி ஆலியா பட்டும், மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினில் உள்ள மஹாகாலேஷ்வர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யாமல் திரும்பிச் சென்றனர்.

பாலிவுட்டில் புகழ்பெற்ற ராஜ்கபூர் குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர், 39, சமீபத்தில் நடிகை ஆலியா பட்டை, 29, மணந்திருந்தார். ரன்பீர் கபூர், 2011ல் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு மாட்டுக்கறி மிகவும் பிடிக்கும் எனக் கூறியிருந்தார். இதற்கு, அந்த சமயத்தில் பஜ்ரங்தளம் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், அயன் முகர்ஜி இயக்கத்தில், பிரம்மாஸ்திரா பாகம் 1: சிவா என்ற பிரமாண்ட ஹிந்தி திரைப்படத்தில் ரன்பீர் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை திரைக்கு வருகிறது. இது தொடர்பான விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்க, நடிகர் ரன்பீர் மத்திய பிரதேசம் வந்தார். அவருடன் அவரது மனைவி ஆலியா பட் வந்தார். அப்போது, ம.பி.,யின் உஜ்ஜயினில் உள்ள பிரசித்தி பெற்ற மஹாகாலேஷ்வர் கோவிலில், ரன்பீர் நேற்று சுவாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு முன் அவர் தெரிவித்த மாட்டுக்கறி கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'பிரம்மாஸ்திரா படத்தை புறக்கணிப்போம்' என்ற பிரசாரத்தை பஜ்ரங்தளம் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் சமூக வலைதளங்களில் முன்னெடுத்துள்ளனர்.

அதோடு, உஜ்ஜயினில் உள்ள மஹாகாலேஷ்வர் கோவிலுக்கு ரன்பீர் வருவதை எதிர்த்து பஜ்ரங்தள தொண்டர்கள் கோவில் வாசலில் நேற்று குவிந்தனர். இதையடுத்து, ரன்பீர் - ஆலியா தம்பதி கோவிலுக்கு வருவதை ரத்து செய்துவிட்டு மும்பை திரும்பினர்.ம.பி.,யின் ஆளும் பா.ஜ.,வைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறியதாவது:கோவிலுக்கு வர வேண்டாம் என, ரன்பீர் கபூரை யாரும் தடுக்கவில்லை. கோவில் வளாகத்தில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அவர்களாகவே சொந்தமாக முடிவெடுத்து திரும்பி சென்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X