பெரியகண்மாய் மதகுப் பகுதியில் துள்ளிய மீன்களை அள்ளிய மக்கள்| Dinamalar

பெரியகண்மாய் மதகுப் பகுதியில் துள்ளிய மீன்களை அள்ளிய மக்கள்

Added : செப் 08, 2022 | |
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே கார்குடியில் பெரியகண்மாய் தலைமதகு பகுதியில் வைகை ஆற்றுநீரில் துள்ளி குதித்த மீன்களை அப்பகுதி மக்கள் வலையிட்டு அள்ளிச் சென்றனர்.தேனி மாவட்டம் வைகை அணை நிரம்பியதால் அதன் உபரி நீருடன்மழை நீரும் சேர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் வழியாக கார்குடியில் உள்ள பெரியகண்மாய் தலைமதகு வாய்க்காலில் 1000 கன அடி தண்ணீர் வருகிறது.

அதிகளவு நீர்வரத்தால் பெரியகண்மாய் நிரம்பி காவனுார், புல்லங்குடி வாய்க்கால்களுக்கு தலைமதகு பகுதியில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதில் ஷட்டர் பகுதியில் ஏராளமான மீன்கள் துள்ளி குதிக்கின்றன.இவற்றை அப்பகுதியை சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளர்கள், பொதுமக்கள் வலை போட்டும், வேட்டி, சேலையை பயன்படுத்தியும் மீன்களை பிடித்து செல்கின்றனர். மதகுப்பகுதியில் இருந்த தண்ணீரில் ஏற்கனவே மீன்கள் வளர்ந்துள்ளன. வைகை தண்ணீர் அதிகளவில் வந்தால் மீன்கள் வாய்க்கால் வழியாக வெளியேறுவதாக மக்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X